Suryavamsam
Suryavamsam Suryavamsam
சினிமா

26 Years of Suryavamsam : Life of Rugged boy சின்ராசு - மைல் கல்லை எட்டிய சூரியவம்சம் !

ராதிகா நெடுஞ்செழியன்

நம்ம எல்லாருமே திகட்ட திகட்ட பாத்து ரசிச்ச திரைப்படம் சூரியவம்சம். இந்த படம் வெளியாகி 26 வருடங்கள் ஆகியிருக்கு. விக்ரமன் இயக்கத்துல சரத்குமார் டபுள் ஆக்ஷன் பண்ணி பக்கா குடும்ப திரைப்படமா வெளியானது தான் சூரியவம்சம் திரைப்படம். இந்த திரைப்படம் பலருக்கும் இன்ஸ்பிரேஷன்னா இருந்துச்சினு சொன்னா அதுல சந்தேகமே இல்ல.

"நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது சிறகை விரித்து பறப்போம்" அப்டின்னு ஒரே பாட்டுல ஓகோனு வளர்றதுக்கு இது ஒன்னும் சூரியவம்சம் படம் இல்ல. இது வாழ்க்கை அப்டின்னு பழமொழியில ஒன்னாவே இந்த படம் ஆச்சு.‌

"மழை பெஞ்சா தானே மண்வாசம் ஒன்ன நினைச்சாலே பூவாசந்தான்" அப்டின்னு முறைப்பெண் கௌரி மேல அம்புட்டு காதல வச்ச நம்ம சின்ராச கௌரி கண்டுக்கவே மாட்டா. நம்ம கௌரிக்கும் சின்ராசுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு பார்த்தா சின்ராசே கல்யாணத்த நிறுத்தணும்னு கௌரி சொல்லிடுவா. இப்படி காதலிச்ச பொண்ணே கல்யாண வேணாம்னு சொல்லும் போது நம்ம சின்ராசோட நிலைம எப்படி இருந்திருக்கும். இந்த மாதிரி வலியை எத்தனை பேர் அனுபவிச்சிருப்பீங்க !

"தீயிலே தென்றலை வாழ்கிறேன் காதலா"

கௌரி ஏமாத்திட்டு போயிட்டா, குடும்பத்துல இருக்கிறவங்க சின்ராசா புரிஞ்சுக்கலன்னு வலியோடு இருந்த சின்ராச காதலால அரவணைச்சவங்க தான் நந்தினி. சின்ராசு கௌரிய துரத்தி துரத்தி லவ் பண்ணது போயி, நந்தினி சின்ராசா துரத்தி துரத்தி லவ் பண்ணாங்க. இப்படி ஒரு பொண்ணு துரத்தி துரத்தி லவ் பண்ற மாதிரி காலம் வராதானு ஏங்குற 90ஸ் கிட்ஸ் இருக்காங்க.

இந்தப் படம் மீம் கிரியேட்டர்ஸ்க்கு ஒரு God father மாதிரி. இந்த படத்துல இருக்க ஒவ்வொரு sceneஉம் மீம்க்கான டெம்ப்ளெட்டா வைக்கலாம் அப்படி இருக்கும் இந்த படம். உதாரணத்துக்கு "பாயாசம் சாப்பிடுங்க ஃபிரண்ட், என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு, என்னோட வெற்றிக்கு எங்க அப்பா தானுங்க காரணம், நீ ஒரு உதவாக்கரை. உன்னை நம்பி வந்த அவ ஒரு உதாவக்கரை" இப்படி லிஸ்ட் ரொம்ப பெருசு.

தேவயானி (நந்தினி) இந்த படத்துல கதாநாயகியா மட்டும் இல்லாம இட்லி உப்புமாவுக்கு பிராண்ட் அம்பாசிடராவும் இருப்பாங்க. காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுற நந்தினிய பாக்கிறதுக்காக அவங்க அப்பா வீட்டுக்கு வருவாரு. அப்பாக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கணும்னு நினைச்ச நந்தினிக்கு அப்புறம்தான் ஞாபகம் வருது, வீட்ல இட்லி மட்டும் தான் இருக்குன்னு.

கலெக்டருக்கு படிச்சா மூளை இப்படி எல்லாம் கூட வேலை செய்யும் போல ! இருந்த இட்லிய உதிர்த்து தாளிச்சு இட்லி உப்புமா ரெடி பண்ணிடுவாங்க. இந்த உப்புமாவ சாப்பிட்டு ஆஹா ஓஹோன்னு நந்தினியோட அப்பாவும் பாராட்டுவாரு. இது யூஸ்வலான உப்புமா மாதிரி இல்லையேனு அப்பா கேக்க. நம்ம தேவயானி இட்லி உப்புமா அப்டின்னு ஒரு டிஷ்ஷ அறிமுகப்படுத்துவாங்க..

இன்னைக்கு வரைக்கும் மீதமான இட்லிய இட்லி உப்புமாவா செஞ்சு நாம சாப்டுட்டு தான் இருக்கோம் இல்லையா !

முன்ன சொன்ன மாதிரியே சூரியவம்சம் திரைப்படம் பல பேருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கு. அப்பா அம்மாவோட சொத்து எல்லாத்தையும் வேணான்னு, காதலர்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா வந்து கூலி வேலை செஞ்சு பெரிய கோடீஸ்வரனா ஆவாங்க. அதுவும் ஒரே பாட்டுல. இன்னிக்கும் "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது சிறகை விரித்து பறப்போம்" அப்டின்னு இந்த பாட்ட கேட்டா புல்லரிச்சிடும் இல்லையா!

நந்தினிக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை. கல்யாணம் பண்ணிட்ட அப்புறம் சின்ராசு ஓரளவுக்கு செட்டில் ஆனதும் நந்தினியை கலெக்டருக்கு படிக்க அனுப்புவாரு. ட்ரெயின் ஏறும் பொழுது நந்தினியா போனாங்க! ட்ரெயின்னவிட்டு இறங்கும்போது கலெக்டர் நந்தினியா கண்ணாடி போட்டுட்டு சும்மா கெத்தா இறங்குவாங்க.

சின்ராசுடைய எக்ஸ் கௌரி ஞாபகம் இருக்குல்ல. சின்ராசா வேணான்னு தூக்கிப் போட்ட கௌரியோட புருஷனுக்கு வேலை கேட்டு சின்ராச பாப்பாங்க கௌரி. அப்போ தேவையானி "காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா." அப்படின்னு ஆரம்பிச்சு நிறைய பேசியிருப்பாங்க. "நான் இதை குத்தி காட்டணும்னு சொல்லலைங்க. யாரையுமே நாம கேவலமா எடை போட்டுடக்கூடாது. உங்க மனசு புண்படும்படியா பேசியிருந்தா என்ன மன்னிச்சிடுங்க" அப்டின்னு பேசியிருப்பாங்க. அப்போ கௌரியோட முகத்தை பார்க்கவே முடியாது.

இந்த படத்தோட பாடல்களும் நம்ம மனசுல அவ்வளவு ஆழமா பதிஞ்சிருக்கு. "சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு" பாட்டு ரீமிக்ஸ் எல்லாம் பண்ணி எத்தனையோ ரீல்ஸ்ல நம்ம பார்த்திருப்போம்.. இப்பயும் சூரியவம்சம் படம்னு சொன்னாலே நமக்கு அதோட பிஜிஎம் தான் ஞாபகம் வரும்.

"லாலலல்ல லல்லா லல்லா லல்லாலலா" ஆமா இப்போ எதுக்கு ராகம் போட்டிங்க ??

பல முறை பார்த்த அப்புறமும் திகட்ட திகட்ட பாத்து ரசிக்கிற படங்கள்ல சூரியவம்சம் கண்டிப்பா இருக்கும். சூரியவம்சம் டிவில போடறாங்கன்னு சொன்னாலே நம்மல்ல நிறைய பேர கையிலயே பிடிக்க முடியாது. ரிமோட்டோட வந்து டிவி முன்னாடி உட்கார்ந்துட வேண்டியது தான் !