Ajith
Ajith Ajith
சினிமா

Shalini Ajith : TMS குரலில் பாடி நடிக்கும் ஷாலினியின் அப்பா பாபு - Youtube Channel தொடங்கி அசத்தல்!

டைம்பாஸ் அட்மின்

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் அஜித் குமார் ரசிகர்களுக்கு ஸ்வீட் சப்ரைஸாக வந்திருக்கிறது ஒரு அப்டேட். ஷாலினியின் அப்பாவான பாபுவின் புதிய யூட்யூப் சானல்தான் அது.

இசைப் பிரியரான பாபுவிற்கு 50, 60களின் வந்த திரையிசை பாடல்கள் என்றால் கொள்ளை பிரியமாம். முக்கியமாக, டி.எம்.சௌந்தரராஜனின் தீவிர ரசிகர். டி.எம்.எஸ்-ஸை அண்ணா என்றே குறிப்பிடுகிறார். பொழுதுபோக்காக சில ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் டி.எம்.எஸ்ஸின் பாடல்களைப் பாடியிருக்கிறார். டி.எம்.எஸ்ஸின் குரலிலேயே பாடியது நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஆனாலும், முழுநேர பாடகராகக் களமிறங்கவில்லை.

இந்நிலையில்தான் யூட்யூப் உலகம் பாபுவை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது. 'ASB' என்கிற பெயரில் ஒரு யூட்யூப் சானலைத் தொடங்கியிருக்கிறார் பாபு. சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'யார் அந்த நிலவு', ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்றிருந்த 'ஓடும் மேகங்களே' பாடலையும் பாடி, நடித்த தன் சானலில் பதிவேற்றியிருக்கிறார். இரண்டுமே அவரின் ஆதர்சமான டி.எம்.சௌந்தரராஜனின் குரலில் வந்தவையே.

டி.எம்.எஸ்ஸின் காந்தக் குரலில் பாபு பாடி, நடித்த இரண்டு பாடல்களுக்கும் கமெண்டில் நல்ல வரவேற்பு உள்ளது. டி.எம்.எஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, இசைப்பிரியர்கள் அனைவரையும் தன் குரலால் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பாபு. டி.எஸ்.எஸ்ஸின் ஹிட்ஸுகளைக் அடுத்தடுத்து பாடி, நடித்து யூட்யூப்பில் பதிவேற்றும் திட்டத்தில் பாபு இருக்கிறாராம்.

இந்த அப்டேட் அஜித் ரசிகர்கள், டி.எம்.எஸ் ரசிகர்கள் உட்பட அனைத்து இசை ரசிகர்களுக்கும் ஸ்வீட் அப்டேட் ஆக மாறியுள்ளது. கலங்குங்க பாபு சார்!