Vishal Vishal
சினிமா

Vishal : என் திருமணத்தை பற்றி ஆராய அது Bermuda Triangle அல்ல - வதந்திக்கு நடிகர் விஷால் விளக்கம்!

என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண்.

டைம்பாஸ் அட்மின்

தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் விஷால், திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷாலும் நடிகை லட்சுமி மேனனும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இது பேசு பொருளானது.

இந்த நிலையில். இது குறித்து நடிகர் விஷால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில், “பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடனான எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது.

என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைவதோடு, அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.

எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன், ஆண்டு, தேதி, நேரம் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.