Old Villain VS Young hero Timepass
சினிமா

Old Villain VS Young hero வில்லனை அடிக்கும் யங் ஹீரோக்கள்

அர்ஜூன் பைட் சீன் எடுக்கப்போறாங்கனு சொன்னா கார்ல ஏறும்போதே கால நாலு சுழட்டு சுழட்டிதான் ஏறுவாரு

"உன்னை பழிவாங்காம விடமாட்டேன்டா"னு சவால் விட்டு நடிக்காத தமிழ் ஹீரோக்களே கிடையாது. ஹீரோ பையைத் தூக்கிட்டு பால்வாடி போன வயசுல நடந்த சம்பவத்துக்கு 25 வருஷம் கழிச்சு வில்லனை தேடி கண்டுபிடிச்சு பழிவாங்குவார். தலையில நரையும் வாயில நுரையுமா இருக்குற அவரை அடிச்சு கொன்னு ஆத்திரத்தை தீர்த்துப்பார். அப்படிப்பட்ட படங்களை வாங்க அலசுவோம்.

’ஜெய் சூர்யா’னு ஒரு படம். கொஞ்சம் சுமாரான படம்தான். நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன்தான் ஹீரோ. கோட்டா சீனிவாசராவ் வில்லன். குறைஞ்சபட்சம் வில்லனுக்கும், ஹீரோவுக்கும் 25 வயசாவது வித்தியாசம் இருக்கும்.அந்த வயசுல வில்லனை ஹீரோ கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாம அடி பின்னி எடுப்பாரு அர்ஜூன். அதுவும் இந்த இன்னைக்கு பைட் சீன் எடுக்கப்போறாங்கனு சொன்னா கார்ல ஏறும்போதே காலை நாலு சுழட்டு சுழட்டிதான் ஏறுவாரு போல அர்ஜூன், அப்படிப்பட்ட ஆளுகிட்ட இந்த வயசான வில்லன் மாட்டுனா சும்மா இருப்பாரா…கட்டிப்போட்ட யானைய கழட்டிவிட்ட மாதிரி எகிறி எகிறி அடிப்பாரு. பாக்கவே பாவமா இருக்கும்ப்பா

அதே மாதிரி ’அபூர்வ சகோதர்கள்’ல குள்ள கமல், அவரோட அப்பா சேதுபதியை கொன்னதுக்காகவும். அம்மாவுக்கு விஷம் ஊத்தி கொடுத்ததுக்காகவும் வயசான நாசர், நாகேஷ், டெல்லிகணேஷ்னு ஒவ்வொருத்தரா தேடிப்பிடிச்சு கொல்லுவார். அதாவது ஹீரோ கருவுல இருக்கும்போதே இவருக்கு வில்லன் உருவாகிடுறாங்க. அப்றம் பொறந்து வளர்ந்து அவங்களை பொறுமையா கொல்றாரு. ஆனா என்ன இருந்தாலும் ஓடக்கூட முடியாத வயசானவங்களை இப்படி கொல்றது சரியா படல.

இதே ஜானர்ல வந்த இன்னொரு படம்தான் ’சிட்டிசன்’ அப்பா – மகன்னு ரெண்டு கேரக்டரா தல நடிச்சிருப்பாரு. இந்திய மேப்புல இருந்தே காணாமப் போன அத்திப்பட்டியை கலெக்டர், எம்.எல்.ஏ, வக்கீல், போலீஸ்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அழிச்சதை உலகத்துக்கு தெரியப்படத்தவும் அப்பா சுப்ரமணியோட அடுத்த வெர்ஷனா வந்து நிக்கிறாரு சின்ன தல. அவர் போராடி எப்படி ஜெயிச்சாருன்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்ல நீங்களே படம் பாத்திருப்பீங்க. 20 வருஷம் கழிச்சி அவங்களை அடிச்சி, உதைச்சி இழுத்துக்கிட்டுப் போயி கோர்ட்டுல ஒப்படைகிறதை கூட ஏத்துக்கலாம். ஆனா அதுக்காக அவர் படம் முழுக்க போட்டுட்டு வர்ற கெட்டப்தான் ரொம்ப ஓவரா இருக்கும்..

-உத்தமபுத்திரன்