Agilan
Agilan Agilan
சினிமா

Agilan, DADA, Christy, Bommai Nayagi - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள் | What to Watch

சு.கலையரசி

இந்த வாரமோ இரண்டாவது சனிக்கிழமை, பெரும்பாலானவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் ஆபீஸ்கள் என அனைத்துமே விடுமுறை தான். இப்படியாக இந்த வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு இந்த வாரத்தை என்ஜாய் செய்வதற்காக வந்துவிட்டது இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.

1. துஜூ தி மெயின் மக்கா ( Tu Jhoothi main makkaar)

இந்தியில் மார்ச் 8ஆம் தேதி லவ் ரஞ்சன் இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஷர்தா கபூர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது.

2. அகிலன் ( Agilan)

N. கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் தமிழில் மார்ச் 10ஆம் தேதி  அகிலன் திரையரங்குகளில் வெளியானது.

3. கொன்றால் பாவம் ( Kondral Paavam)

தமிழில் மார்ச் 10ஆம் தேதி தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது.

4. மெமரிஸ் ( Memories)

தமிழில் மார்ச் 10ஆம் தேதி ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி, பார்வதி அருண், RJ ரமேஷ் நடிப்பில் தியேட்டரில் வெளியானது.

5. துறைமுகம்( Thuramukam)

மலையாளத்தில் மார்ச் 10 ஆம் தேதி ராஜிவ் ரவி இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது.

6. ஸ்கிரீன் 6( ஸ்கிரீன் 6)

ஆங்கிலத்தில் மார்ச் 10ஆம் தேதி ஜென்னா ஆர்ட்க நடிப்பில் தியேட்டரில் வெளியானது.

7. டர் ( Tar)

டோட் ஃபீல்டு  இயக்கத்தில் ஆங்கிலத்தில் மார்ச் 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.

8. 65

ஸ்காட் பீக், பிரையன் வூட்ஸ் இயக்கத்தில் 65 படம் ஆங்கிலத்தில் மார்ச் 10ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் science fiction திரைப்படம்.


இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் :

1. பேராவே ( Faraway)

ஜெர்மன் மொழியில் நெட்பிக்ஸில் ( Netflix)  மார்ச் 8ஆம் தேதி வனேசா ஜூப் இயக்கத்தில் வெளியான ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

2. சங் கான் டங்க் ( Chang can dunk)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டரில் (Hotstar) மார்ச் 10 ஆம் தேதி ஜிங்கியி சாவோ ( Jinguyi Shao) இயக்கத்தில் வெளியானது.

3. லுதேர்: த ஃபாலன் சன் ( Luther: The Fallen Sun)

ஆங்கிலத்தில் (Netflix) நெட்ஃபிளிக்ஸ்ஸில் மார்ச் 10ஆம் தேதி ஜேமி பேன்னே இயக்கத்தில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சீரிஸ்கள்

1. காலேஜ் டிடெக்டிவ்ஸ் ( College detectives)

இந்தியில் அமேசான் பிரைமில் (Amazon prime)  மார்ச் 8ஆம் தேதி முகுந்தா அகர்வால், விதூர் சுக் நடிப்பில் வெளியான மிஸ்டரி சீரிஸ்.

2. அங்கர் டேல்ஸ் ( அங்சர் டேல்ஸ்)

வெங்கடேஷ் மஹா, மடோனா செபஸ்டியன், பிந்து மாதவி நடிப்பில் பிரபாலல் திலக்  இயக்கத்தில் தெலுங்கில் ஹாட்ஸ்டரில் (Hotstar) மார்ச் 9ஆம்தேதி வெளியானது.

3. யூ சீசன் 4 பகுதி 2 ( You S4 Part 02)

ஆங்கிலத்தில் (netflix) நெட்ஃப்லிக்ஸில் மார்ச் 9 ஆம் தேதி வெளியானது.

4. ஆக்சிடென்டல் ஃபார்மர் அண்ட் கோ ( Accidental farmer & co)

தமிழில் சோனி லைவ்( Sony LIV)  மார்ச் 10ஆம் தேதி வைபவ், படவா கோபி, ரம்யா பாண்டியன் நடிப்பில் சுகன் ஜே இயக்கத்தில் வெளியானது.

5. பேட் ட்ரிப் ( Bad Trip)

தெலுங்கில் சோனி லைவ்( Sony LIV) மார்ச் 10ஆம் தேதி வெளியானது.

6. ராணா நாயுடு ( Rana Naidu)

இந்தியில் (netflix) நெட்ஃப்லிக்ஸில் மார்ச் 10ஆம் தேதி suparn Verma, Karan anshuman இயக்கத்தில் வெளியானது. இந்த சீரிஸ் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டுள்ளது.


திரையரங்குகளில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் :


1.கிறிஸ்டோபர் ( Christopher)

மலையாளத்தில் பிரைமில்( Prime) மார்ச் 9 ஆம் தேதி உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியானது.

2. வரையான் ( Varayan)

மலையாளத்தில் அமேசான் பிரைமில்( Amazon Prime)  மார்ச் 9ஆம் தேதி ஜிஜோ ஜோசப் இயக்கத்தில் லியோனா லிஷாய் நடிப்பில் வெளியானது.

3.டாடா ( dada)

தமிழில் அமேசான் பிரைமில்( Amazon Prime) மார்ச் 10 ஆம் தேதி கணேஷ் கே. பாபு இயக்கத்தில் அபர்ணாதாஸ், கவின் நடிப்பில் வெளியானது.

4.ரன் பேபி ரன் ( Run baby Run)

தமிழில் மார்ச் 10 ஆம் தேதி ஹாட்ஸ்டரில் ( Hotstar) ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் RJ பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது.

5. பொம்மை நாயகி ( Bommai Nayagi )

தமிழில் ஜீ5 யில் ( Zee 5) மார்ச் 10ஆம் தேதி ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியானது.

6. ரேகா ( Rekha)

மலையாளத்தில் (netflix) நெட்ஃப்லிக்ஸில் மார்ச் 10ஆம் தேதி ஜிதின் இசாக் தாமஸ் இயக்கத்தில் வின்சி அலோசியஸ், உண்ணி லாளு நடிப்பில் வெளியானது.

7. கிறிஸ்டி ( Christy)

மலையாளத்தில் சோனி லைவ்( Sony LIV) மார்ச் 10 ஆம் தேதி அல்வின் ஹென்றி இயக்கத்தில் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியானது.

8. ரைமோ ( Raymo)

கன்னடத்தில் ஜீ5வில் ( Zee 5) மார்ச் 10ஆம் தேதி பவன் வதெயர் இயக்கத்தில் இஷான், ஆஷிகா ரங்கநாதன் நடிப்பில் வெளியானது.