Ajith Kumar timepass
சினிமா

Ajith Kumar : ராணுவத்துக்கு ட்ரோன்கள் தயாரிக்கும் அஜித் குமார் குழு - இது அதிரடி அப்டேட் !

இதன்படி அடுத்த 12 மாதத்தில் 165 கோடி பட்ஜெட்டில் 200 ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கப்போவதாகக் கூறப்படுகிறது.

டைம்பாஸ் அட்மின்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் விமானப் பிரிவு மாணவர்கள் இணைந்து `தக்‌ஷா (Daksha)' என்ற பெயரில் அதிநவீன ட்ரோன்கள் தயாரிப்பு அமைப்பை நடித்தி வருகிறார். இக்குழுவிற்கு ஆலோசகராக நடிகர் அஜித்குமார் செயல்பட்டு வருகிறார்.

பறக்கும் ட்ரோன் அல்லது விமான ஆம்புலன்ஸ்கள், கோவிட் காலத்தில் பாக்டீரியா எதிர்ப்பு தெளிப்பான்களை நகரங்களில் தெளிக்கும் ட்ரோன்கள் எனப் பல புதிய ட்ரோன்களை டிசைன் செய்வதோடு, அதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்திக் காட்டினர் இக்குழுவினர். இதற்கு அஜித் குமாரின் அனுபவமும் ஆலோசனையும் கைக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் 'தக்‌ஷா' குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 12 மாதத்தில் 165 கோடி பட்ஜெட்டில் 200 ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கப்போவதாகக் கூறப்படுகிறது.

தற்போது அஜித், லண்டனில் பைக் ரைடில் இருக்கிறார். அதை முடித்துவிட்டு மகிழ் திருமேனி இயக்கும் 'விடா முயற்சி' படத்தின் படப்பிடிப்பிற்குத் தயாராகவிருக்கிறார். இதற்கிடையில் ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் 'தக்‌ஷா' குழுவிற்கும் ஆலோசகராகவும் செயல்படவுள்ளார்.