வீட்டில் அண்ணன் செல்வராகவனுக்கு வாங்கிக் கொடுத்ததுபோல தனக்கும் ஜியோமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொடுக்காததால், மூனு படத்தில் வருவது போல, தன் கழுத்தில் காம்பஸ் வைத்து அழுது, அப்பா கஸ்தூரி ராஜாவைக் கதற வைத்திருப்பார்.
க்ளாஸ்மேட் திவ்யாவோடுதான் எப்போதும் திரிவார். ஒருமுறை பாத்ரூமுக்கும் ஒன்றாகவே போக, பெஞ்ச் மீது ஒரு நாள் முழுக்க நிற்க வைத்தார் சார்.
அடிக்கடி லீவ் போடுவார். ‘ஏன்டா நேத்து ஸ்கூலுக்கு வரலை?’ என மிஸ் கேட்டால், கழுத்தில் கை வைத்துக் கரகர குரலில், ‘தொண்டையில ஆப்பரேஷன்’ எனச் சொல்லி டெரர் காட்டி இருப்பார்.
காரணமே இல்லாமல் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களை விரும்பிப் பார்த்திருப்பார். அதனாலேயே வெறி வந்து மழையில் ஆடி இருப்பார்.
நிறைய சூப் குடித்திருப்பார். நல்லி எலும்பு சூப் என்றால், இந்த சூப் பாய்க்கு அம்புட்டு இஷ்டம் அப்போ.
அடிக்கடி ஸ்கூல் பாத்ரூமுக்குள் போய் உள் தாழ்ப்பாள் போட்டு உட்கார்ந்துகொண்டு, ‘யாராச்சும் இருக்கீங்களா? எனக்குப் பயமா இருக்கு’ என சவுண்டு கொடுத்து ஆயாக்களை அலற வைத்திருப்பார்.
விளையாடும்போது பசங்க யாருக்காச்சும் சுளுக்கு ஏற்பட்டால், பி.டி மாஸ்டர் இவரைத்தான் கூப்பிடுவார். சுள்ளானாக இருந்தாலும் சுளுக்கெடுப்பதில் கில்லாடி.
நீச்சல் போட்டியில் எப்போதும் ஸ்டேட் வின்னர். சுனாமியிலேயே ஸ்விம்மிங் போட்டவர்ல.
இங்கிலீஷ் ரைம்ஸைத் தமிழ் கலந்து புது தினுசாய் சொல்வதே தனுஷ் ஸ்பெஷல்.
எல்லோருக்கும் தெரிந்த ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்ஸை ‘டிஸ்டன்ஸ்ல ஸ்டாரு ஸ்டாரு... ஸ்டாரு கலரு ஒயிட்டு’ எனப் படித்திருப்பார் இந்தக் கொலவெறி பாய்.
எக்ஸாம் பேப்பரில் ஜிலேபி சுத்தி எழுதி டீச்சர்ஸை குழம்ப விடுவதில் தனுஷ் கில்லாடி. ‘ உன் எழுத்து புரியவே இல்லைடா’ என்றால், ‘பார்த்தா புரியாது... பார்க்கப் பார்க்கத்தான் புரியும் மிஸ்’ எனச் சொல்லி இருப்பார்!