நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் எனப் பன்முகம் தாண்டி பரிணமித்திருக்கும் தனுஷ் பாடிய பாடல்கள்தான் இந்த சினிமா விடுகதைக்கான விடைகள்.
1. மாநிலம் மட்டும் அல்ல கண்டம் தாண்டியும் ஹிட்டான பாட்டு. அனிருத்துக்கு அட்டகாசமான என்ட்ரி தந்த பாட்டு. மனைவியின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருந்தாலும், இந்தப் பாடலுக்குத்தான் ஏக எதிர்பார்ப்பும் கைத்தட்டலும். சரி காண்டாகாம பாட்டு என்னன்னு சொல்லுங்க பாஸ்?
2. அண்ணன் இயக்கம் என்றாலும் தனுஷ் நடிக்காத படத்தில் வரும் இந்தப் பாட்டு ஆயிரத்தில் ஒன்றல்ல. ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய இந்த போதைப் பாட்டுக்கு மயங்கியது தமிழகம். சொல்லிடுங்கோ என்ன பாட்டுனு?
3. சோகப்பாட்டுதான். அம்மாவைப் பற்றிய பாட்டுதான். எளிமையான வரிகள்தான். பழகிய மெட்டுதான். ஆனாலும் எஸ்.ஜானகியுடன் தனுஷ் கலங்கிய பாட்டுக்கு கலங்கியது ரசிகர் கூட்டம். சமீபத்தில் ட்ரெண்டிங்கில் நின்றதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. என்ன சோகம் பாஸ்? சொல்லுங்க பாட்டை.
4. வெகு ஜாலி என்டர்டெயின்மென்ட் சாங். தனுஷ் குரலில் இருக்கும் அடர்த்தி பாட்டின் நையாண்டிக்கு வேறு வகையில் துணைபோனது. இன்னும் பாடப் பாட பாட பாட்டு முடியல பாஸ். என்ன பாட்டு?
5. படமோ அட்டர் ஃப்ளாப். ஆனால் இந்தப் பாட்டுக்கு இருந்தது எக்கச்சக்க எதிர்பார்ப்பு. நெளிந்து வளைந்து திருகித் திரியும் பாட்டுக்கு தனுஷின் குரலும் மெஸ்மரிசம் செய்தது. என்ன பாட்டுன்னு படத்தின் டைட்டில் பண்ணாம சொல்லுங்க பாஸ்?
6. `செஞ்சிருவேன்'னு சொல்லி செஞ்ச படத்துப் பாட்டு. கலெக்ஷன் அள்ளிய படத்தில் செம குத்து போட்ட டான்ஸுக்கு அப்ளாஸ் அள்ளியது. மாறி மாறிச் சொல்லாம நேரா சொல்லுங்க. என்ன பாட்டு?
7. குத்துப்பாட்டுக்கு ஸோலோவாய் இறங்காமல் கூட்டணியுடன் இறங்கினார். ஆனாலும் தமிழ்நாடே தலைகீழாய் ஆடியது பாட்டுக்கு. தனுஷுக்கு படத்தில் ஏகவேஷம் இருந்தாலும் இந்த வேஷத்தில் பாடிய பாட்டுக்குத்தான் விசில் பறந்தது. அசிங்கமா திட்டாம அழகா சொல்லுங்க பாட்டு என்னன்னு?
விடைகள்:
1. ஒய் திஸ் கொலவெறி - 3,
2. உம்மேல ஆசதான் - ஆயிரத்தில் ஒருவன்,
3. அம்மா அம்மா - வேலையில்லா பட்டதாரி,
4. ஓட ஓட ஓட தூரம் குறையல- மயக்கம் என்ன,
5. டெடிபியரினை கட்டி உறங்குற- நையாண்டி,
6. தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு - மாரி,
7. டங்காமாரி ஊதாரி - அநேகன்.