Decoding Tamil Cinema songs Timepass
சினிமா

Decoding Song lyrics | Vijay ஜிங்கிலியா ஜிங்கிலியானு ஏன் பாடினார்?

தமிழ் சினிமா பாடல்களில் எத்தனை தடவை கேட்டாலும் 'என்ன லாங்வேஜ்டா இது? ஒண்ணுமே புரியல' லிரிக்ஸுக்கு எல்லாம் என்னதான் மீனிங் இருக்கும்னு ஒரு விளக்கம் கொடுத்திருக்கோம். படிச்சு பொதுஅறிவை வளர்த்துக்கங்க!

Saran R

*'அந்நியன்' படத்துல கலர் கலர் பெயிண்டோட ரண்டக்க ரண்டக்கன்னு ஒரு நச் சாங் இருக்கும். இது விளையாட்டு சம்பந்தப்பட்ட பாட்டு பாய்ஸ். கிரிக்கெட்ல ரன் எடுக்காம விக்கெட் ஆனா அதை டக்-அவுட்னு சொல்லுவாங்க. அதைத்தான் இந்தப் பாட்டுலயும் ரண்டக்கன்னு சொல்லி ரன் எடுக்காம அவுட் ஆன நீ ``டக்கு`` அப்படின்னு சொல்லி இருக்கார். தெரிஞ்சிக்கோங்க மக்களே.

* 'அட்றாட்றா நாக்க மூக்க' பாடல் வடசென்னை பாரம்பரியத்தின் வழிவந்த அர்த்தம் பொதிந்த பாடல். இதுல வர நாக்க முக்காவுக்கு ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு மீனிங் சொன்னாலும் ரிலையபல் சோர்ஸ் சொல்லுற மீனிங் வேற லெவல் ப்ரோ. 'நாக்க அப்படின்னா நாக்கு, மூக்க அப்படின்னா மூக்கு.' நாக்க முக்க அப்படின்னா எந்த போதைப் பொருளும் யூஸ் பண்ணாம நாக்கையும் மூக்கையும் பத்திரமா பார்த்துக்குங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. புகைப்பிடித்தல் பக்கத்திலிருப்பவர் மூக்கிற்கு கேடு விளைவிக்கும். ஆங்.

*விஜய் ஆண்டனி மியூசிக்ல ``நான்`` படத்துல மக்காயலா மக்காயலான்னு ஒரு தத்துவ பாட்டு இருக்கு. இந்த மக்காயலாவுக்கு என்னதான் அர்த்தம்ன்னு ரிசர்ச் பண்ணி பார்த்ததுல ஒரு விஷயம் தெரிஞ்சது. சமீபத்துல ரூபாய் நோட்டை எல்லாம் தடை பண்ணதால மக்கள் மனசு எல்லாம் ``ஒரே ரணமா கெடக்குன்னு`` சொல்லுற ரேஞ்சுக்கு கஷ்டப்படுறாங்க. அதனாலதான் மக்காயலா மக்காயலா காயமாஉவான்னு மக்களோட இதயம் எல்லாம் காயம் ஆகிடும்னு அப்பவே சொல்லி இருக்காங்க.  

*ஷக்கலக்க பேபி, ஷக்கலக்க பேபி அப்படின்னு ஒரு காவியமான சாங் இருக்கு. இந்த ஷக்கலக்கவுக்கு ஆஃப்ரிக்கன் மொழில சுறான்னு அர்த்தம். ஷக்கலக்க பேபின்னா குட்டிசுறான்னு அர்த்தமாம். அதாவது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வர சுறாவோட இனத்தை காப்பாத்த தான் சுறா குட்டியை எல்லாம் லவ் பண்ண சொல்லி இருக்காங்க. லவ் ஆல் சுறா.

*விஜய்யோட புலி படத்துல `ஜிங்கிலியா ஜிங்கிலியா' அப்படின்னு குழந்தைங்க கூட கேக்க முடியாத சாங்க ஒன்னு வந்தது. அந்த பாட்டுக்கு என்னதான் மீனிங் இருக்கும்னு எங்க தேடியும் கிடைக்காம கூகுள் பண்ணா அது எதோ பழங்குடி மக்களோட மொழியாம். அந்த மொழில ஜிங்கிலியாவுக்கு பிரச்சனைன்னு அர்த்தம். ஆமா ஆமா எங்களுக்கும் இந்த பாட்டுதான் பிரச்சனை.

*ஜும்பலக்கா ஜும்பலக்கான்னு ஒரு ஏ.ஆர்.ரகுமான் சாங் இருக்கு. அந்த சாங் வந்தப்ப கிட்டத்தட்ட எல்லா டான்ஸ் புரோகிராம்லயும் அந்த சாங்க் தான் ஓடும். அப்படிப்பட்ட சாங்ல வர அந்த ஜும்பலக்காவுக்கு என்ன அர்த்தம்னு தேடிப்பார்த்தோம். ஒண்ணுமில்ல பாஸ்... ஜம்ப் அப்படிங்கிறதான் ஜும்ப் அப்படின்னு எழுதி இருக்காங்க. அதாவது குதிக்க சொல்லி இருக்காங்க. அதுவும் அலேக்கா குதிக்க சொல்லி இருக்காங்க. தினமும் அப்படி குதிச்ச உடம்பு குறையும் ப்ரோ.

*முன்னொரு காலத்துல பிரசாந்தோட ``சலாம் குலாமு, சாலம் குலாமு`` அப்படின்னு ஒரு சாங் மாஸ் ஹிட்டானது. சலாம்ன்னா எல்லாருக்கும் தெரியும் வணக்கம் அப்படின்னு அதென்ன பாஸ் குலாம்ன்னு நிறைய பேர் தேடி இருப்பாங்க. குலாம் அப்படின்னா ``ஹிந்திக்கே மாலும்ல`` அடிமைகள்ன்னு அர்த்தம். அதாவது அடிமையா இருக்குற எல்லாரும் வணக்கம் வச்சுத்தான் ஆகனும்ன்னு சொல்லி இருக்காங்க. இதை படிக்கிறப்ப எதோ அரசியல் இருக்குற மாதிரி தெரியுதுல....அதான் அதேதான்.