Leo timepass
சினிமா

Leo : Big Daddy Arrived என Update கொடுத்த லியோ ஒளிப்பதிவாளர் Manoj Paramahamsa !

இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ள இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

டைம்பாஸ் அட்மின்

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாகவுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் லியோ படம். இந்தப் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா, லியோ படத்தில் பயன்படுத்தும் நவீன கேமரா குறித்த காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "ரெட் கேமராக்களின் 'பிக் டாடி' வந்துவிட்டார். இந்த, ‘வி ராப்டோர் எக்ஸ் எல்’ (V RAPTOR XL) என்ற நவீன கேமரா ‘லியோ’ போரில் களமிறங்கத் தயாராக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.