விக்ரம் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிப் பெற்றது. அதைத்தொடர்ந்து, விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைக்கிறார் லோகேஷ் கனகராஜ். பெயரிடப்படாத இந்த Thalapathy 67 படத்தின் ஷீட்டிங் தொடங்கி, நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பெரிய பாராட்டுகளைப் பெற்றவர் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில்.
தனது தயாரிப்பில் வெளியாகவுள்ள 'தங்கம்' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், நேற்று (ஜனவரி 23) கலந்துக்கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
"தளபதி 67 இல் நீங்களும் நடிக்கிறீர்களா?" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் (LCU) வந்தால், அதில் நானும் வரலாம்" என்று பதிலளித்துள்ளார்.
அடுத்ததாக, "விக்ரம் படத்தில் வந்த அமர் கதாப்பாத்தை வைத்து தனி படம் உருவாகுமா?" என்று கேள்விக்கு, "அது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அதற்கான வாய்ப்பு இருந்தால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்" என்று ஃபஹத் ஃபாசிக் கூறினார்.