Maamannan timepass
சினிமா

Maamannan Interval : இது கன்னியாகுமரி மாமன்னன் version ! | Vadivelu - Udhayanidhi Stalin

ஒருவேளை மாமன்னன் கன்னியாகுமரில நடந்திருந்தா இடைவேளை சீன்ல இப்படிதான் பேசிருப்பாங்க, ரத்னவேல் : அது பழக்கம்லே மக்கா. உனக்க அப்பனுக்கிட்ட சென்னாலும் அவரு இருக்கமாட்டாரு. வா நீ சேர்ல இரு.

ஜெபிஷா ஜெ ஷோ

அதிவீரன் அம்மா : மக்கா.. அப்பா உனட்ட பேசணுமாம்.

அதிவீரன் : நா அந்தாளிட்ட பேச முடியாது.

மாமன்னன்: லே மக்கா..  இந்த ஒருக்காமட்டும் நான் செல்லுதத கேளு. அப்ப நான் வெறும் தொண்டன் லே மக்கா. இப்ப நான் ஒரு எம்எல்ஏ. என்னால உனக்கு சகாயிச்ச பற்றும் லே. நீ எனக்க கூட ரத்னவேல் வீட்டுக்கு வா. பேசுவோம்..

(ரத்னவேல் வீடு - மாமன்னன் நின்னிட்டு பேசறாரு)

ரத்னவேல் : இது உனக்க பயலா அண்ணா. பாத்தியா.. எனக்கிட்ட மறச்சிருக்க. இப்படி வளந்திருக்கான். பேரு என்ன பயலுக்க?

மாமன்னன் : அதிவீரன்.
ரத்னவேல் : வாலே. சேர்ல இரு.

(அதிவீரன் சுற்றுபாடு பாத்திட்டு) : அப்பா.. நீ ஏன் நிக்குதே.. நீ இரு.

ரத்னவேல் : அது பழக்கம்லே மக்கா. உனக்க அப்பனுக்கிட்ட சென்னாலும் அவரு இருக்கமாட்டாரு. வா நீ சேர்ல இரு..

அதிவீரன் : அப்பா..  நீ இந்த சேர்ல இரு.

ரத்னவேல் : அவரு கேக்கமாட்டாரு.. நீ இரு! 

அதிவீரன் : என்ன கேக்கமாட்டாருனு சொல்லுதே. நீ ஒருவாட்டி அங்ஙேருக்கிட்ட இரிக்க சென்னியாலே.

ரத்னவேல் முகம் மாறுது. அதிவீரன் அடுத்த நின்னு கையோங்கினவன அடிச்சிட்டு மாமன்னன இருக்க வைக்கிறான் சேர்ல.

ரத்னவேல் : என்னலே அண்ணா. அந்த பய சென்னதும் சேர்ல இருந்தே. நம்ம இப்படியால அண்ணா பழவினோம்.

(லே..  இரண்டண்ணத்தையும் பிடிங்கலே)

சண்ட சீன்.