Tamanna timepass
Satire

Tamanna : உலகின் 5வது பெரிய வைரம் வைத்திருக்கும் தமன்னா ! - பரிசளித்த பிரபலம் யார்?

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது தமன்னாவுக்கு பரிசாக ரூ. 2 கோடி மதிப்புள்ள வைரத்தை அவர் அளித்திருந்தார். இந்த வைரம்தான் உலகில் 5 ஆவது மிகப்பெரிய வைரம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.

டைம்பாஸ் அட்மின்

உலகின் 5 ஆவது பெரிய வைரத்தை நடிகை தமன்னாவுக்கு ஒருவர் பரிசளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பல மொழிகளில் டாப் நடிகர்கள் அனைவரிடமும் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த அவரது இணைய தொடர்கள் லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்டவை இந்திய அளவில் கவனம் பெற்றன.

ஜீ கர்தா தொடரில் நடித்துள்ள விஜய் வர்மாவுடன் தமன்னா காதலில் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமன்னாவிடம் உலகில் 5 ஆவது மிகப்பெரிய வைரம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

2019 ஆம் ஆண்டு சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தில் தமன்னா நடித்திருந்தார். சிரஞ்சீவி ஹீரோவாக நடித்த இந்த படத்தை அவரது மருமகளும், நடிகர் ராம் சரணின் மனைவியுமான உபாசனா கொனிடேலா தயாரித்திருந்தார். அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், அனுஷ்கா ஷெட்டி, விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் நிஹாரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தமன்னாவுக்கு பரிசாக ரூ. 2 கோடி மதிப்புள்ள வைரத்தை உபாசனா கொனிடேலா அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வைரம்தான் உலகில் 5 ஆவது மிகப்பெரிய வைரம் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.