இடம் பொருள் ஏவல்
இடம் பொருள் ஏவல் டைம்பாஸ்
சினிமா

'அப்பாடா இப்பயாச்சும் ரிலீஸ் ஆகுதே' - இடம் பொருள் ஏவல் தயாரிப்பாளரின் புதிய அறிவிப்பு

டைம்பாஸ் அட்மின்

இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோர் சார்பில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் திரைப்படம் தயாரானது.

இப்படத்திற்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுத, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நம்பிக்கை நாயகன் விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா, வடிவுக்கரசி நடிக்க, யுவன் சங்கர் ராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் முதன் முறையாக இணைய உருவானது. பல்வேறு காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில், இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, நீண்ட நாள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளிவர இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில், பலரும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.