Akshay Kumar
Akshay Kumar டைம்பாஸ்
சினிமா

Selfiee : கில்லாடி குமார் இப்ப Guinness குமார் - அசத்திய Akshay Kumar !

டைம்பாஸ் அட்மின்

இந்தி படங்களைக் கலக்கிட்டு இருக்க அக்ஷய் குமார் தன்னோட 30 வருட திரைப்பட வாழ்க்கையில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல நடிச்சிருக்கார். இவருக்கு இந்தில மட்டும் இல்லாம மத்த மொழிகளிலும் ஆடியன்ஸ் இருக்காங்க. இவருக்கு இருக்கிற ஃபேன் பேஸ் இந்தியால இருக்க வேற எந்த நடிகர்களுக்கும் இல்லை அப்படின்னு சொல்லலாம்.

30 வருட திரைப்பட வாழ்க்கையில் நூறு படங்களுக்கு மேல மட்டும் இல்லாம பல விருதுகளையும் வாங்கி இருக்காரு பல ரெகார்ட்சயும் பண்ணி இருக்காரு நம்ம அக்ஷய் குமார்.

அக்ஷய் குமார் 1991ல சௌங்கத் படம் மூலமாகதான் சினிமாவுக்கு வந்தார். ஆனா அந்த படம் அக்ஷய்க்கு அடையாளத்தை கொடுக்கல. ஒரு வருஷத்துக்கு அப்புறம் அவரு 'கில்லாடி' அப்படின்ற படம் நடிச்சார். இந்த படம் தான் அக்ஷய் குமார் யாருனு இந்தியாவுக்கும் இந்தியாவை கடந்து இருக்கக் கூடிய இந்திய சினிமா ரசிகர்களுக்கும் காட்டி இருக்கு. இந்த படத்துக்கு அப்புறம் அக்ஷய் குமார "கில்லாடி குமார்" அப்படினு அவருடைய ஃபேன்ஸ் கூப்பிட ஆரம்பிச்சாங்க.

இப்போ கில்லாடி குமார் அப்படி என்ற பட்டத்தை மாத்தி கின்னஸ் குமார் அப்படின்னு கூப்பிடலாம் போல ஒரு சம்பவத்தை தான் நம்ம அக்ஷய்குமார் பண்ணியிருக்காரு. அப்படி என்ன பண்ணி இருக்காருன்னு தானே யோசிக்கிறீங்க !! மூன்று நிமிஷத்துல 184 செல்ஃபி புகைப்படங்களை எடுத்து இருக்காரு. இப்படி மூணு நிமிஷத்துல 184 செல்ஃபி புகைப்படங்களை எடுத்து கின்னஸ் உலக ரெக்கார்ட்ல அடுத்த ரெகார்ட்ட செட் பண்ணி இருக்காரு நம்ம கில்லாடி குமார்.

அக்ஷய் குமார் உடைய அடுத்த திரைப்படம் 'செல்ஃபி' இந்த படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியா எம்ரான் ஹஷ்மி நடிச்சி இருக்காங்க. இந்த செல்ஃபி திரைப்படம் பிப்ரவரி 24 திரையரங்கில் வெளியாக போகுது.

2019 மலையாளத்துல பிரித்விராஜ் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடா நடிச்ச டிரைவிங் லைசென்ஸ் படத்துடைய ஹிந்தி ரீமேக் தான் செல்பி. இந்த படத்துக்கான பிரமோஷன் வேலையா மும்பையில அவருடைய ஃபேன்ஸை சந்திச்சிருக்காரு. அந்த ஸ்பாட்ல தான் இந்த கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் பண்ணி இருக்காரு நம்ம அக்ஷய் குமார்.

அக்ஷய் குமாருக்கு முன்னாடி ரெண்டு பேரு மூணு நிமிஷத்துல எத்தனை செல்ஃபி எடுக்க முடியும் அப்டிங்ற ரெக்கார்ட் பண்ணி இருக்காங்க. அந்த ரெண்டு ரெக்கார்டயுமே முறியடிச்சு அடுத்த வின்னிங்ஸ செட் பண்ணி இருக்கார் அக்ஷய் குமார். இதுக்கு முன்னாடி யூஎஸ்ஏ-வ சேர்ந்த ஜேம்ஸ் ஸ்மித் கிட்டத்தட்ட 168 புகைப்படங்களை மூணு நிமிஷத்துல எடுத்திருக்காரு.

அவருக்கு அப்பறம் 2015ல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், லண்டனில இருக்க சான் ஆண்ட்ரியாஸின் பிரீமியரில மூணு நிமிஷத்துல 105 செல்ஃபி புகைப்படங்களை எடுத்து கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் பண்ணி இருந்தாரு. இதுக்கு அடுத்தபடியா நம்ம அக்ஷய்குமார் பண்ண இந்த ரெக்கார்ட் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ல இடம் பெற்று இருக்கு.

அக்ஷய் குமாரா திரைப்பட வாழ்க்கைய தொடங்கி கில்லாடி குமாரா திரை உலக சுத்தி வந்த இவரு இன்னைக்கு கின்னஸ் குமாரா வலம் வந்துட்டு இருக்காரு !! இவரை பாராட்டுற மாதிரி பல போஸ்ட் எல்லா சோசியல் மீடியாலையும் வைரல் ஆகிட்டு இருக்கு !

- நெ.ராதிகா.