Sakthimaan Timepassonline
சினிமா

Shaktimaan : 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகும் சக்திமான் !

இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. நான் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை.

டைம்பாஸ் அட்மின்

“சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது” என்று அந்தத் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான சக்திமான் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டடது. இதில் சக்திமானாக முகேஷ் கண்ணா நடித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சக்திமான் தொடர் படமாக உருவாக உள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ரூ.200-300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. கொரோனாவால் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் நான் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை

சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும். மேலும், படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுடப குழுவின் பெயர்களும் விரைவில் வெளியாகும். படம் வேறொரு தரத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.