கவுண்ட மணி டைம்பாஸ்
சினிமா

தமிழ் பழமொழிகளும் கவுண்ட மணியின் மைண்ட் வாய்ஸும்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு - "தம்பி... ஒரு மனுசன் பொய் சொல்லலாம், அதுக்காக ஏக்கர் கணக்கில எல்லாம் சொல்லக் கூடாது!"

கம்மாய் திமிங்கலம்

ரூம் போட்டு யோசித்தது போய், ‘மீம்’ போட்டு யோசிக்கும் இந்த யுகத்தில் கவுண்டமணியாரின் காமெடி இல்லாமல் காலம் தள்ள முடியாது. சில பழமொழிகளையும் பொன்மொழிகளையும் கேட்கும்போது நமக்குள் கேட்கும் கவுண்டரின் மைண்ட் வாய்ஸ்கள் எப்படி இருக்கும்னு பார்ப்போமா?

முழுசும் நனைந்த பின், முக்காடு எதற்கு?

இனி நீ வயசுக்கு வந்தா என்ன, வரலைனா என்ன!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரனே செக்யூரிட்டி!

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.

தம்பி... ஒரு மனுசன் பொய் சொல்லலாம், அதுக்காக ஏக்கர் கணக்கில எல்லாம் சொல்லக் கூடாது!

அற்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பானாம்.

இந்த ரோடு என்ன வெலைனு கேளு!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். தம்பீ, க்ரீஸ் டப்பாவை எப்பிடி ஒதச்ச?

ஏழைக்கேத்த எள்ளுருண்டை.

நம்மளால எது முடியுமோ, அதை மட்டுமே பண்ணுங்கடா!

துஷ்டனைக் கண்டால், தூர விலகு.

ஆண்டவா, என்னை ஏன் இந்த மாதிரி கழிசடைப் பசங்களோட எல்லாம் சேரவைக்கிற?

கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்.

சங்கு ஊதுற வயசுல சங்கீஈஈஈதாவா?

ஆக்கப் பொறுத்த தெய்வம், ஆறப் பொறுக்கலையாம்.

அட நாயே... சோறு போடுறதுக்கு முன்ன எதுக்குடா உப்பை அள்ளித் தின்னே?

கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது.

வடக்குப்பட்டி ராமசாமி பணம் ஊ... ஊ... ஊ...!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

டேய் தகப்பா! இது உனக்கே நியாயமாடா?

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

வீட்ல திங்க சோறு இருக்கா? அப்புறம் என்ன நாயே கிரிக்கெட் ஸ்கோர் வேண்டிக்கெடக்கு?