டைம்பாஸ்
டைம்பாஸ் டைம்பாஸ்
சினிமா

KGF, RRR, Brahmastra: கூகுலில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படம் இதான்!

சு.கலையரசி

எதை கேட்டாலும் பதில் தரும் கூகுளில், 2022 ஆம் ஆண்டு  அதிகம் தேடப்பட்ட படங்களின்  பட்டியலையும் கூகுள்  நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் பல மொழிப் படங்கள் இடம்பெற்றிருந்தாலும் தமிழில் ஒரு படம் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றது கவலைக்குரிய ஒன்றாகும்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின்  பட்டியலில் முதலிடம் இந்தியில் வெளியான பிரம்மாஸ்திரா படத்திற்கதான். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்திருந்தனர்.

இரண்டாவது இடத்தை கன்னட படமான கேஜிஎஃப் 2 பிடித்துள்ளது.  பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளனர் .

மூன்றாவது இடத்தில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான இந்தி படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீரை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், நாடு முழுவதும் சர்சையைக் கிளபியது.

நான்காவது இடத்தில் இருக்கும் தெலுங்கு படம் RRR. ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரன், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியான தெலுங்கு  திரைப்படம்.

ஐந்தாவது இடத்தில் கன்னட படம் காந்தாரா உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பல மொழிகளில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

ஆறாவது இடத்தில் தெலுங்கு படம் புஷ்பா உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், பல இந்திய மொழிகளில் வெளியானது.

ஏழாவது இடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற விக்ரம் படம் உள்ளது. இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியானாலும் கூகுளில் அதிகம் தேடிய திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரு தமிழ் திரைப்படம் விக்ரம்தான்.

எட்டாவது இடத்தை இந்தி படமான லால் சிங் சத்தா பிடித்திருக்கிறது. அமீர்கான் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மலையாளத்தில் மோகன் லால், தமிழில் கமல் ஹாசன் (பாபநாசம்), இந்தியில் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தான் த்ரிஷ்யம் 2. இந்த படம் கூகுள் தேடல் பட்டியலில் 9 வது இடத்தை பெற்றுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட  படங்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ள படம்  Thor: Love and Thunder என்ற ஆங்கில படம்.   மார்வெல் வரிசையில் மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பில் வெளியான இந்த படம் தேடுதல் பட்டியலில் 10வது இடத்தை பிடித்து  உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

கூகுளின் 2022 அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் டாப் 10 வரிசையில் இந்தி படம் தான் அதிகம் தேடப்பட்டுள்ளது.