Varisu timepass
சினிமா

Varisu Pongal: விஜய் மிமிக்ரி செய்த டயலாக்குகள் இவைதான்

கப்பு முக்கியம் பிகிலு - ஒரே ஒரு கப்ப வாங்கிட்டு என்னமோ வேல்ட் கப்பு வாங்கின மாதிரி ஏல்லா படங்களுக்கு ரெஃபரன்ஸா யூஸ் பண்றது தப்பு பிகிலு.

சு.கலையரசி

புது வருட தொடக்கமே குஷியாதா இருக்கும். காரணம் "நியூ இயர் அண்டு பொங்கல் செலிப்ரேஷன்" ஜனவரி மாதம் அப்படினாலே பண்டிகை தான். இந்த  பண்டிகையை இன்னும் சிறப்பிக்கிறது படங்கள்தான். இந்த வருஷம் 2023 தொடக்கத்திலேயே பொங்கலுக்கு வெளியான 2 பெரிய நடிகர்களோட படம் வாரிசு மற்றும் துணிவு.

சரி, இப்ப நாம வாரிசு படத்துக்கு வருவோம். நம்ம பட்டிமன்ற பஞ்சாயத்து தலைவர் சாலமன் பாப்பையா சொல்ற மாதிரி, "படத்த என்னடா பண்ணி வச்சிருக்கிங்க...?"

வாரிசோட ஒன்லைனே சூரியவம்சத்தோட ஃபேமஸ் டயலாக்கான "என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சி" டயலாக்தான். இப்படிப்பட்ட வாரிசு படத்தோட வாரிசு பண்ண சில தங்லைஃப்ஸ் தான் இதெல்லாம்.

TR - புலி ஆடியோ லாஞ்ச்ல டி.ஆர் விஜய்ய அட்ராக்ட் பண்ணி சில டயலாக்ஸ் பேசினார் (இது அட்ராக்ட் பண்ற புலி, இது ஆக்ரோஷமான புலி, இது அட்டாக் பண்ற புலி,..) அதே ஸ்டைல விஜய் வாரிசுல கேட்ச் பண்ணி தன்னோட அண்ணன்களை அட்டாக் பண்ணிட்டாரு ( அட்ராக்ட் பண்ண அண்ணா, அட்டாக் பண்ற அண்ணா,...) .

மெட்டி ஒலி - படம் பார்க்கிறோமா சீரியல் பார்க்கிறோமா என்பது கூட தெறியாத அளவிற்கு படத்தின் கதை இருந்தது. முதல் ஒன்றரை மணி நேரத்தில் இடம் பெற்ற மெட்டி ஒலி பாடலில் தொடங்கி அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் பாடப்புத்தக டயலாக் காட்சி நமக்கு விஜயும் சீரியல் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டியது.

மொச்சக் கொட்ட பாடல் - படத்துல கிட்டத்தட்ட இருபது நிமிடம் மட்டுமே வந்த நம்ம கதாநாயகிக்கு 90s கிட்ஸ்ஸோட ஃபேவரட் பாடலான மொச்சக் கொட்ட பல்லழகி பாடலை எதுக்கு தான் கொடுத்தாங்கன்னு தெரியில. ஒரு காலத்தில இந்த பாட்டை டவுன் பஸ்ல ரீல் தேயுற வரை கேட்போம். ஆனால், இந்த படத்துல இந்த பாட்டு வர்ற சீன் பாத்தாலே நம்ம ரீல் அறுந்துடும் போல. 

பூவே உனக்காக - மத்தவங்க யாரும் கலாய்க்க கூடாதுன்னு இவரை இவரே கலாய்ச்சிக்கிட்ட சீன் தான் பூ உதிருற டயலாக் சீன். பூவே உனக்காக படத்துல இவரோட காதல் தேல்வியப்போ வர்ற "உதிர்ந்த பூவ ஒட்டவைக்கிற" டயலாக் இந்த படத்துல காதல சேர்க்குறதுக்காக பயன்படுத்திட்டாரு. இவருக்கு தகுந்த மாதிரி டயலாக் எல்லாம் மாத்தி மாத்தி பேசி டயலாக்கான மாரியாதையையே குறைச்சிட்டாரு.

குடும்பங்கள் கொண்டாடும் படம்:  இவரோட படத்துக்கு இவரே ப்ரமோஷன் கொடுத்திருக்கிறார். அதாங்க "குடும்பங்கள் கொண்டாடும் படம்". இந்த சொந்த ப்ரமோஷன் இருக்க மத்த ப்ரமோஷன் எதுக்கு? படம் எடுக்க செலவு பண்ண நீங்க ப்ரமோஷன் பண்ண காசு இல்ல போலையே  சொந்த படத்துல அந்த படத்துக்கே ப்ரமோஷன் பண்ணி இருக்கிங்க.

செல்லோ I Love you - அவரு படத்தோட டயலாக்க அவரே பேசி க்ளாப்ஸ் வாங்கிட்டாரு. என்னதா டயலாக்க பிரகாஷ் ராஜ் கிட்ட இருந்து கடன் வாங்கி பிரகாஷ் ராஜ்க்கே சொன்னாலும், "செல்லோ I Love you" டயலாக் பிரகாஷ் ராஜ் சொல்லும்போதுதான் வேற வேற வேற லெவல்ல இருக்கும்.

கப்பு முக்கியம் பிகிலு - ஒரே ஒரு கப்ப வாங்கிட்டு என்னமோ வேல்ட் கப்பு வாங்கின மாதிரி ஏல்லா படங்களுக்கு ரெஃபரன்ஸா யூஸ் பண்றது தப்பு பிகிலு.