Leo  timepass
சினிமா

Leo : Vijay - Lokesh Kanagaraj இணையும் படத்தின் பெயர் லியோ ! | LCU

அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பான் இந்தியா முறையில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்பாஸ் அட்மின்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது.

லியோ படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி 2-ம் தேதி துவங்கியது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்திற்கான பெயர் ‘லியோ’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பான் இந்தியா முறையில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.