Vikraman  டைம்பாஸ்
சினிமா

Vikraman vs Azeem : 'வாத்தி' விக்ரமன் கடந்து வந்த பாதை | BiggBoss Tamil 6

அடிக்கடி சமூக கருத்துக்களை ஆங்காங்கே தெறிக்கவிட்டு, சமூகக்கனியாவும் வலம் வந்தார். மொத்தத்தில், குடும்ப பாசம், ஆக்‌ஷன், கோபம், சமூக கருத்து என ஒரு ஹரி படத்தையே பிக் பாஸ் வீட்டில் ஓட்டிக்காட்டினார்.

சு.கலையரசி

பிக்பாஸ்னாலே ஒரு நாடகக் கூடம். அப்படிப்பட்ட நாடகக் கூடம் சீசன் 6 உடைய ட்ரெண்டிங் கன்டெஸ்டென்ட்டில் விக்ரமனும் ஒருத்தர்.

Actor, Journalist, Politician, Anchorனு பரபரப்பு ராஜாவா வலம் வந்த விக்ரமன் பிக் பாஸ் வீட்டுக்குள்ள முதல்ல அதிமுக மந்திரி மாதிரி பம்மிட்டுதான் இருந்தார். அப்புறம், எடப்பாடியே எழுச்சிக் கண்ட கதையைப் பார்ப்போம்.

குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அட்வைஸ் என்ற பெயரில் நல்ல அறிவுரைகளையும் கொடுத்துட்டு, திரும்ப அவங்க கிட்ட இருந்தே கலாய்யும் வாங்கிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரு எதையும் தாங்கும் ஓபிஎஸ் மோடில் வலம் வந்தார்.

வந்த புதுசுல பிக்பாஸ் குடும்பத்துல தனிமையா இருந்த விக்ரமன் நாட்கள் போக போக பிக்பாஸ் குடும்பத்தை தன்னோட குடும்பமாக நினைத்து மற்ற குடும்ப உறுப்பினர்களோட இணைந்து அவரோட ஆட்டத்தை ஆட தொடங்கிட்டார்.

'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லாலலா..'னு விக்ரமன்-ற பெயருக்கு நியாயம் செஞ்சுருக்கார். அடிக்கடி சமூக கருத்துக்களை ஆங்காங்கே தெறிக்கவிட்டு, சமூகக்கனியாவும் வலம் வந்தார் இந்த சமுத்திரக்கனி. மொத்தத்தில், குடும்ப பாசம், ஆக்‌ஷன், கோபம், சமூக கருத்து என ஒரு ஹரி படத்தையே பிக் பாஸ் வீட்டில் ஓட்டிக்காட்டினார்.

இப்படி ஆரம்பம் அமைதியா இருந்தாலும் ஆட்டம் அடாவடியா இருக்கனும்ன்றத மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் புரிய வைத்து, இப்ப ஃபைனல்ஸ் வந்து இருக்கார் விக்ரமன் இராதாகிருஷ்ணன்.

பல முற்போக்கான விஷயங்கள, இத்தன லட்சம் பேரு பார்க்குற ஒரு நிகழ்ச்சில, இவ்ளோ எளிமையா சொல்லி ட்விட்டர்ல 'அறம்வெல்லும்'னு ஹேஷ்டேக் போட்டு, விக்ரமன் ரசிகர்கள் களமாடிட்டிருக்காங்க.

பொதுவாகவே விக்ரமன் and Azeem அமர்க்களமே இல்லாம சண்டை போட்டு அமைதியா ஒட்டிப்பாங்க. இப்படிப்பட்ட ரெண்டு பேரும் இந்த பிக்பாஸ் சீசன் 6 உடைய ஃபைனலிஸ்ட்ல தேர்வாகி இருக்காங்க. இன்னும் இரண்டு வாரத்துல தெரியப் போகுது இந்த ஆட்டத்தோட ஆட்ட நாயகன் யாருன்னு??