அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளைகள் டைம்பாஸ்
சினிமா

அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளைகள் - சிறுகுறிப்பு வரைக?

கொட்டாச்சி

அந்தக்கால எம்.ஆர்.ராதாவிலிருந்து, இந்தக்கால கார்த்திக் வரை ஃபாரின் ரிட்டன் மாப்பிள்ளைகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்கள்.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா என்று எந்த நாட்டில் இருந்து வந்து இறங்கியவராக இருந்தாலும், பொதுவாக இவர்கள் அழைக்கப்படுவது அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளை என்றுதான்.

இந்த கேரக்டர்களுக்கு என சில பொதுவான குணாதிசயங்களை பார்ப்போம்.

க்ளைமாக்ஸ்ஸில் திருமணத்தில் தாலியை எடுத்து, ஹீரோயினின் முகத்துக்கு நேராக வைத்திருக்க வேண்டும்.

ஹீரோ, ஹீரோயின் அல்லது ஹீரோவின் நண்பன் 'நிறுத்துங்க' என கத்தியதும், அதிர்ச்சியான முக பாவனை காட்ட வேண்டும்.

மாப்பிள்ளை ஒரு காலத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நடிகையை இந்த படத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தப்பி ஓடி வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

வெளிநாட்டில் படித்திருந்தாலும் கூட தமிழ் கலாச்சாரத்தை மதிப்பவன் நான், அடுத்தவன் காதலி எனக்கு மனைவியாக முடியாது என்பது உள்ளிட்ட சில டயலாக்குகளை உதிர்த்துவிட்டு ஹீரோவிடம் கைகுலுக்கி விடை பெறலாம்.

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மாப்பிள்ளை தமிழ் சினிமாவுக்கு தேவையோ தெரியவில்லை.