sachine 90s kids Cricket
Lifestyle

90s kids Cricket: 'சதங்களின் கொண்டாட்டம்' - Epi 5

வார்னரும், பட்லரும் சதமடிச்சா, Antigravity ஆசாமிகளாகி, காத்துல எம்பிக் குதிப்பாங்க. பாண்டிங் ஃபேமிலிக்கு, பறக்கும் முத்தத்தை பார்சல் பண்ணுவாரு.

Ayyappan

டிராவிட் மாதிரி கிளாசிக்கலா, டிஃபென்சிவ் கிரிக்கெட் ஆடி சேர்க்கப்பட்டாலும் சரி, கெயில் மாதிரி எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துல வந்து சேர்ந்தாலும் சரி, சதம்ன்றது ஸ்பெஷல்தான். அப்படிப்பட்ட சதத்துக்கான கொண்டாட்டம், வீரர்களைப் பொறுத்து எப்படி customisedஆக மாறிருக்குன்னுதான் பாக்கப் போறோம்.....

1895ல, 100-வது ஃபர்ஸ்ட் கிளாஸ் சதத்த முதல்முதல்ல அடிச்சவரா, டபிள்யூ ஜி கிரேஸ், ரெக்கார்ட் பண்ணப்ப, அதக்கொண்டாட அவரோட சகோதரர், பிட்சுக்குள்ள சாம்பெய்ன் பாட்டில எடுத்துட்டு வந்தாராம் (அதே இன்னிங்ஸ கன்டினியூ பண்ணி, ரெட்டைச்சதம் வந்தப்ப, இன்னொரு பாட்டிலும் வந்தது, தனிக்கதை!)
அது இன்னைக்குவரை பெருசா பேசப்படுது!

ஏன்னா, அடுத்த நூறு வருஷத்துக்கு, 90-களுக்கு முன்னாடிலாம், சதத்துக்கோ, விக்கெட் வீழ்ச்சிக்கோ, அந்தக் குறிப்பிட்ட பேட்ஸ்மேன் அல்லது பௌலர்ட்ட இருந்து பெருசா ஆர்ப்பாட்டம்லாம் இருக்காது; பெரும்பாலும், கைகுலுக்கல்கள், கரவொலியோட எல்லாம் முடிஞ்சுடும். 1985ல, இங்கிலாந்துக்கு எதிரா, 56 பால்ல, அதிவேக சதத்த ரிச்சர்ட்ஸ் அடிச்சுருப்பாரு. அப்போக்கூட, வலதுகை பேட்ட உயர்த்திப் பிடிக்க, இடதுகையால தன்னோட நெஞ்சைத் தட்டிப்பாரு.

அவ்ளோதான், உச்சகட்டக் கொண்டாட்டமே! வீரர்களைவிட, ஆடியன்ஸ்தான் அதிகமா அதக் கொண்டாடுவாங்க...

இப்போ அது எப்டிலாம் கொண்டாடப்படுது?

வார்னரும், பட்லரும் சதமடிச்சா, Antigravity ஆசாமிகளாகி, காத்துல எம்பிக் குதிப்பாங்க.

பாண்டிங் ஃபேமிலிக்கு, பறக்கும் முத்தத்தை பார்சல் பண்ணுவாரு.

உசேன் போல்டோட மான் கராத்தே போஸ்ல ராம்நரேஷ் சர்வான் செலிப்ரேட் பண்ணிருக்காரு.

2018ல, 54 பந்துகள்ல வந்து சேர்ந்த கேஎல் ராகுலோட சரவெடி சதத்த, ரொனால்டோ - மார்ஸிலோவோட சல்யூட்டோட கோலியும் அவரும் கொண்டாடினாங்க.

2018ல ஜோ ரூட்டோட மைக்டிராப் செலிபிரேஷனும், அவரோட விக்கெட் விழுந்ததும் கோலியும் அதையே பண்ணதும், ரசிகர்கள ரிப்பீட் மோட்ல பார்க்கவச்சது.

பாபர் அசாமோட கர்ஜிக்குற செலிப்ரேஷன் மாஸா இருக்கும்.

சிலநேரம் யாருக்கோ அனுப்பப்படற செய்தியா செலிப்ரேஷன் இருக்கும். ராம்டின் 2012ல சதமடிச்சுட்டு அவரப்பத்தி தொடர்ந்து விமர்சனம் பண்ண ரிச்சர்ட்ஸுக்கு, "இப்போ பேசுங்க பார்ப்போம்னு" எழுதியிருந்த பேப்பரக் காட்டுனாரு.

அஷ்வின் சென்னைல வச்சு அடிச்ச சதத்த, அவரவிட அதிகமா, சிராஜ் செலிப்ரேட் பண்ணது நெகிழ்ச்சியான தருணம்.

முஷ்பிகுர் ரஹீமோட நாகினி செலிப்ரேசனதான், பங்களாதேஷ் பரம்பர பரம்பரயா ஃபாலோ பண்றாங்க.

நெகட்டிவிட்டிக்கு நோ எண்ட்ரினு சூசகமா சொல்ற கேஎல் ராகுலோட 'Shut the noise' செலிப்ரேஷன், லைஃப் லெசன் தான்.

கெயிலோட செலிப்ரேஷன்ஸ் விசித்திரமாவும் இருக்கும், மாறிட்டேவும் இருக்கும். மல்லாக்கப் படுத்து, குழந்தைய தாலாட்டுற மாதிரி பேட்டத் தாலாட்டி, 'பாஸ்'ன்ற பொருள்படுற மாதிரி, பேட் மேல ஹெல்மெட் வச்சு, பேட்ல இருக்க 'பாஸ்'ன்ற வார்த்தைய சுட்டிக்காட்டி, இன்னமும் Salt bae celebration, சிஆர்7 செலிபிரேஷன்னு நிறையவே இருக்கு.

மிஸ்பா உல்ஹக், லார்ட்ஸ்ல வச்சு சதமடிச்ச பிறகு பண்ண Pushups செலிப்ரேஷன் நினைவிருக்கா?

தோனியோட பழைய ஹேர்ஸ்டைலையும்  அவரோட ஃபேமஸ் Gun shot செலிப்ரேசனையும் மறக்கமுடியுமா?!

இதுல அதிகபட்ச ஓட்டுவாங்கக் கூடியதுன்னா, ஜடேஜாவோட ஸ்வார்ட் செலிப்ரேஷன்தான், நிறையப் பேரோட ஃபேவரைட் அது.

இந்தியர்களுக்கு ஸ்பெஷல்னா, சச்சினோட 100-வது சதம், கோலியோட 71-வது சதம், ரோஹித்தோட முதல் ஓவர்சீஸ் சதம் இதெல்லாம்தான்.

இப்படி, சதம் ஒருபக்கம் அணிக்கானதுன்னா, இன்னொருபக்கம், செலிப்ரேஷன் அந்த தனிப்பட்ட வீரரோட சாதனைக்கானதுன்ற மெண்டாலிட்டி இப்போ வந்துடுச்சு.

அதுவும் ஃபார்ம்ட்டோட நீளம் சுருங்க சுருங்க, இப்படிப்பட்ட மசாலா சேர்க்கப்பட்டதுதான், கிரிக்கெட்ட இன்னமும் அழகாக்கிடுச்சு.....