Mumbai  Mumbai
Lifestyle

Mumbai : காதலிக்காக ஒரு வருடமாக கார் உதிரி பாகங்களை திருடிய காதலர் ! | Love

காதலி ஆசையாக கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கஒரு வருடமாக 100க்கு மேற்பட்ட கார்களில் இருந்து சுமார் 2.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களைத் திருடியுள்ளார்.

சு.கலையரசி

காதலி ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக இப்படியெல்லாமா இறங்கீட்டாங்க? இது கொஞ்சம் புது டெக்னிக்கா இருக்கே. அப்படி அந்த பொண்ணு என்ன கேட்டு இருக்கும்?

மும்பையைச் சேர்ந்த மோஷின் ஷைக் (28) என்பவர், தனது காதலி ஆசையாக கேட்கும் பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக கடந்த ஒரு வருடமாக கார்களின் உதிரி பாகங்களை திருடியுள்ளார். 100க்கு மேற்பட்ட கார்களில் இருந்து சுமார் 2.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களை திருடியுள்ளார் மோஷின்  ஷைக்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள மோஷின் ஷைக்யிடம் போலீசார் செய்த விசாரணையில் இவரது இலக்கு பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் மட்டும் தான் என்பது தெரியவந்துள்ளது. காதலி கேட்ட பொருளை வாங்கித் தருவதற்காக தான் கார் உதிரிபாகங்களை திருடியதாக கூறியுள்ளார். 

தனது காதலியை ஆடம்பரமாகவும் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றவும்,சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் இருந்து இன்ஜின் கண்ட்ரோல் யூனிட் (இசியூ) மற்றும் ஈசியூ இன்ஜெக்டர்களை திருடியுள்ளார்.

எம்ஐடிசி போலீசார் திருட்டுக்காக மோஷின் ஷைக்கை கைது செய்து அவரிடமிருந்து ரூ.2.8 லட்சம் மதிப்புள்ள 68 இன்ஜின் பாகங்களை மீட்டுள்ளனர். ஜூன் 25 அன்று அந்தேரி-எம்ஐடிசி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வண்டிகளின் இசியூக்களை ஷேக் திருடியது சுமார் 35 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

ஜூலை 1 அன்று ஷைக்கினுடைய மலாட் வீட்டில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட பாகங்களின் விலை சுமார் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமாக அந்தேரியில் வசிக்கும் கோரக்நாத் ஜாதவ் (40) என்பவரின் வண்டியிலிருந்து ரூ.34,000 மதிப்புள்ள ECU-ஐ திருடியதும் ஷேக் மாட்டிக்கொண்டார். அதே இரவில் ரூ.98,000 மதிப்புள்ள ECU-க்களை திருடியுள்ளார். ஜாதவ் அளித்த புகாரின் அடிப்படையில், மலாட் போலீசார் ஷேக்கை கைது செய்துள்ளனர்.