Karnataka  Karnataka
Lifestyle

Karnataka : தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் ஏற்றிய விவசாயி ! | Farmer

சிறுத்தையை மீட்க வனத்துறையினரும் பலமுறை முயற்சி செய்து பல நடவடிக்கைகளும் எடுத்துள்ளனர். இந்நிலையில் தன்னைத் தாக்கிய சிறுத்தையை தனியாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

சு.கலையரசி

கர்நாடகா ஹாசன் பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்து வேணுகோபால் என்பவர் 9 மாத  சிறுத்தையை பிடித்து, அதன் கைகால்களை கட்டி பைக்கில் கட்டி தனது கிராமத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளார்.

முத்து வேணுகோபால் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை காலை தனது விவசாய நிலத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சிறுத்தைப்புலி அவரைத் தாக்கியது. வேணுகோபால் தைரியத்தை வரவழைத்து விரட்ட முயன்றார். ஆனால், சிறுத்தை அவரை தாக்கியது. அதையும் மீறி வேணுகோபால் அதை பிடித்து கயிற்றால் கைகால்களை கட்டினார்.

அப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்  கிராம் மக்கள் வனத்துறையினரிடம் பல முறை புகார் செய்துள்ளனர். சிறுத்தையை மீட்க வனத்துறையினரும் பலமுறை முயற்சி செய்து பல நடவடிக்கைகளும் எடுத்துள்ளனர். இந்நிலையில் தன்னைத் தாக்கிய சிறுத்தையை தனியாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

தடிகளின் துணையுடன் சிறுத்தையை தனது மோட்டார் சைக்கிளில் கட்டிவிட்டு அடிப்பட்ட காயங்களுடனேயே தனது கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் அளித்து, சிறுத்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கந்தசியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிறுத்தைப்புலிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்றாலும், வனச்சட்டத்தின்படி, வேணுகோபால் தற்காப்புக்காக விலங்கைப் பிடித்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை மருத்துவ சிகிச்சையில் பாதுகாப்பாக உள்ளது. இதற்கிடையில், இது போன்ற நிகழ்வுகளை எப்படி கையாள்வது என்பது குறித்த விழிப்புணர்வுக்காக முத்து கவுன்சிலிங் அனுப்பப்பட்டார்.