Apple Airpods timepass
Lifestyle

America : Vitamin மாத்திரை என நினைத்து Apple Airpods-ஐ விழுங்கிய பெண் ! - அப்புறம் என்னாச்சு?

கமெண்ட்டில் ஒரு நபர் AirPods இரண்டையும் விழுங்கிவிட்டிர்களா என்று கேட்டார்.

டைம்பாஸ் அட்மின்

அமெரிக்காவின் பெண்மணி ஒருவர் தற்செயலாக ஆப்பிள் ஏர்போடை வைட்டமின் மாத்திரை என்று தவறாக நினைத்து விழுங்கியுள்ளார்.

முன்னர் குழந்தைகள் நாணயம் போன்ற சிறிய பொருட்களை விழுங்குவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு பெரியவர் இதுபோன்ற செயலை செய்ததைக் கேள்விப்பட்டது உண்டா?

அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயதான ரெனால்டோர் தன்னா பார்கர் என்ற பெண் தனது கணவரின் Apple AirPod Pro-வை வைட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து விழுங்கியதை Tik Tok-க்கில் வீடியோவாக வெளியிட்டு அனைவருக்கும் சிரிப்பை ஏற்படித்தியுள்ளார். மேலும் இந்த வீடியோ Tik Tok-க்கில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

காலை அவர் நடைப்பயிற்சியின்போது, அவரின் தோழியை பார்த்திருக்கிறார் கணவர். அவருடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது துரதிர்ஷ்டவசமாக, விழுங்குவதற்காக வைத்திருந்த வைட்டமின் மாத்திரைகளுடன், தன் கணவரிடம் இருந்து வாங்கி வைத்திருந்த ஏர் போட்டை மாத்திரை என நினைத்து வாயில் போட்டு விழுங்கினார்.

அப்போது தான் அவரின் கையில் இருக்கும் மாத்திரைகளை கவனித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பில்லை.

டானா மருத்துவர் மற்றும் நண்பர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார். அவர்கள் அனைவரும் இவருக்கு அதை இயற்கையாகவே கழிவில் வெளியேறும் என்று அறிவுறுத்தினார். மேலும் இவரின் பார்வையாளர்கள் இதனை வேடிக்கையான சம்பவமாக கேலி செய்து பல கமெண்ட்கள் செய்தனர். கமெண்ட்டில் ஒரு நபர் AirPods இரண்டையும் விழுங்கிவிட்டிர்களா என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை என்றார்.

தற்போது, ஏர்போட் தனது வாயில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் அதை தெரிவிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டார். 

- மு.குபேரன்.