America
America timepass
Lifestyle

America : 4000 அமெரிக்க டாலரை அசால்டாக விழுங்கிய நாய்‌‌ - வேதனையில் உரிமையாளர் ! 

டைம்பாஸ் அட்மின்

பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் வீட்டில் ஒருவராகவே நினைத்து வளர்க்கப்படுவதால் உரிமையாளர்கள் அது செய்யும் சேட்டைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பல நேரங்களில் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சில நேரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கவும் செய்கிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கிளேட்டன் மற்றும் கேரிலா என்ற இருவரும் செசில் என்ற 7வயது நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த நாயானது 4000டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு 3லட்சத்து 32ஆயிரம் ரூபாய் பணத்தை மென்று சாப்பிட்டுள்ளது. நாய் பணத்தை சாப்பிட்டது தெரியாமல் வீட்டு உரிமையாளர்களான கிளேட்டன் மற்றும் கேரிலா இருவரும் பணத்தை தேடியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் நாய் தான் விழுங்கிய பணத்தை வாந்தி எடுக்க தொடங்கியது.

இதனை பார்த்த இருவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். உடனடியாக நாய்க்கு மருத்துவ சிகிச்சை செய்து பணத்தை எடுக்கலாமா என்று கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள். ஆனால், மருத்துவர் அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கூறிவிட என்ன செய்வதென்றே தெரியாமல் பதற்றத்துடன் இருந்திருக்கிறார்கள்.

நாயும் மெல்ல மெல்ல தான் விழுங்கிய பணத்தை வாந்தி எடுத்ததை அடுத்த அதனை கழுவி சுத்தம் செய்து வங்கியில் மாற்றியிருக்கிறார்கள். இன்னமும் 38000 ரூபாய் பணம் வெளியே வரவில்லை எனவும், இப்படி எங்களது நாய் செய்வது இதுவே முதன்முறை எனவும் அதன் உரிமையாளர் கிளேட்டன் வேதனை தெரிவித்துள்ளார்.

- மு‌.இந்துமதி.