America  timepass
Lifestyle

America : ஒரு டாலருக்கு விற்கப்பட்ட அமெரிக்கா வீடு - இப்படியும் ஒரு சாதனையா?

டைம்பாஸ் அட்மின்

அமெரிக்காவில் இரண்டு படுக்கை அறைகளுடன் ஒரு சமையலறையுடன் கூடிய வீடு வெறும் ஒரு டாலருக்கு விற்பனையாகயுள்ளது.

ஒரு பிஸ்கட் வாங்கும் விலையில் அமெரிக்காவில் ஒரு வீட்டை வாங்க முடியும் என்று கூறினால் நம்மில் எத்தனைப்பேர் அதனை நம்புவோம். ஆனால், அது உண்மைதான் அமெரிக்காவின் மிக்சிகனில் ஒரு வீடு வெறும் ஒரு டாலருக்கு விற்கப்பட உள்ளதால் இந்த வீடு "உலகின் மலிவான வீடு" என்று அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளதென நியூயார்க் போஸ்ட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இவ்வீடு டெட்ராய்ட்டிற்கு வெளியே சுமார் 30 மையில் தொலைவில் அமைந்துள்ளது.மேலும், இவ்வீடு இரண்டு படுக்கை அறைகள் மற்றும் ஒரு குளியலறையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வீட்டின் உட்புற புகைப்படங்கள் கீறப்பட்ட தளங்களையும் குளியலறை வசதியுடன் கூடிய ஒரு மூடிய தொட்டியையும் ஒரு சமையல் அறையையும் கொண்டுள்ளது.

'ரியல் எஸ்டேட்' என்கிற தளத்தில் இந்த வாரம் வெளியிடப்பட்ட "உலகின் மலிவான வீடு"க்கான பட்டியலில், மிச்சிகன் மாகாணத்தின் பாண்டியாக் நகரில் 2-படுக்கையறைகள் 1-குளியலறையுடன் கூடிய 742 சதுர அடி வீட்டின் மதிப்பு $1 க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CNBC பத்திரிக்கை நிறுவனத்திடம் இவ்வீட்டின் முகவர் கிறிஸ்டோபர் ஷூபெல் கூறுகையில், ஒரு டாலருக்கு பட்டியலிடப்பட்ட வீடு விற்பனையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கிறார்.

இந்த ஒரு டாலர் வீட்டின் சலுகையைப் பார்த்த சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்கள் இதனைப் பற்றி தேட தொடங்கியுள்ளனர். மேலும், 200 க்கும் மேற்பட்ட ஆஃபர்கள் வந்துள்ளதாகவும் ஷீபெல் கூறுகிறார். "எனக்கு இந்தியா, ஆசியா, யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன" என ஷூபெல் கூறுகிறார்.

- க.ஆர்த்தி.