Apple
Apple Timepassonline
Lifestyle

Apple Products 2023 : IOS 17, Vision Pro Heatset - இன்னும் என்னென்ன?

டைம்பாஸ் அட்மின்

உலகின் முன்னணி தொழிற்நுட்ப சாதனங்களை தயாரிக்கும் ஆப்பில் நிறுவனம் விற்பனைக்கு வரவுள்ள தனது புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடத்தில் உலகலாவிய டெவலப்பர்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில்தான் ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய சாதனங்களில் விவரம்:-

புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் (15 inch Macbook Air) :  ஆப்பிள் நிறுவனம் புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 4 வித்தியாசமான நிறங்களில் வெளியாகியுள்ள மேக்புக் ஏர் மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேக் ஸ்டூடியோ மாடல் Mac Studio Model :

ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் ஸ்டூடியோ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. எம்2 மேக்ஸ், எம்2 அல்ட்ரா எஸ்ஒசி ஆகிய இரு பெயர்களில் இந்த மாடல் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மேக்புரோ மாடல்:

ஆப்பிள் நிறுவனம் புதிய மேக் புரோ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் சிலிகான் தொழில்நுட்ப வசதியுடன் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐஒஎஸ் 17-ல் புதிய அப்டேட்கள்:

ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளான ஐஒஎஸ் 17-ல் புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த மென்பொருள் மூலம் இயங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

ஏர்டிராப் அப்டேட்ஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டிராப்பிலும் புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹெய் சிரி என்பதற்கு பதில் சிரி:

ஆப்பிள் ஐஒஎஸ் 17 மென்பொருளை கொண்ட ஐபோன் உள்பட சாதனங்களில் 'சிரி' வசதி உள்ளது. இதில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஐபோன் தேடுபொறி மூலம் உரிய தகவல்களை அளிக்கிறது. இதில், ஹெய் சிரி (Hey Siri) என்பதற்கு பதில் இனி 'சிரி' (Siri) என மட்டும் கேட்டாள் போது என வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏர்பட்ஸ் புதிய வசதிகள்:-

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பட்ஸ் புரோ சாதனத்தில் புதிய ஆடியோ வசதிகள் சேர்க்கப்பட்டுளது.

புதிய வசதிகளுடன் ஆப்பிள் டிவி

ஆப்பிள் டிவி-யில் இனி பேஸ் டைம் ஆப் செயல்படும். இதன் மூலம் ஐபோன் கேமரா மூலம் மேற்கொள்ளப்படும் வீடியோ கால்களை இனி டிவி ஸ்கிரீனில் பார்க்க முடியும்.

வாட்ச்ஓஎஸ் புதிய அப்டேட்கள்:

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் பிரிவான வாட்ச் ஓஎஸ்10 சாதனத்தில் புதிய அப்டேட்கள் இணைக்கப்பட்டுள்ளது.