Hand of God timepass
Lifestyle

Hand of God : உலகின் மிகவும் விலை உயர்ந்த மரடோனாவின் ஜெர்ஸி - காரணம் இதுதான் !

மரடோனா இதுகுறித்து பேசும் பொழுது, 'ஹேண்ட் ஆஃப் காட்' என்று கூறினார். அதாவது 'கடவுளின் கை' என்று பொருள். தனது தலையாலும், கடவுளின் கையின் உதவியாலும் அந்தக் கோலை அடித்தேன் என்று லாபகரமாக பேசினார்.

டைம்பாஸ் அட்மின்

உலகின் மிகவும் விலை உயர்ந்த சட்டை எதுவென்று தெரியுமா உங்களுக்கு? அந்த சட்டையின் விலையை கேட்டால் நீங்கள் உண்மையாகவே அதிர்ந்து போவீர்கள். அந்த சட்டையின் விலை ரூபாய் 77.5 கோடி என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

அனைவருக்கும் அர்ஜென்டினாவின் ஜாம்பவானான டியாகோ மரடோனா பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். இவர் அணிந்த நீல நிறநிற எண் 10 ஐ கொண்ட ஜெர்சி தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த சட்டை என்ற சாதனையை வைத்திருக்கிறது.

ஜூன் 22, 1986 அன்று மெக்சிகோ சிட்டியில் நடந்த அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை காலிறுதி கால்பந்து போட்டியில் டியாகோ மரடோனா இரண்டு கோல்களை அடித்தார். அப்போது அடிக்கப்பட்ட இரண்டு கோல்களின் முதல் கோல் அவரது கையில் உதவியால் அடித்தார். நடுவரால் ஹெட்டரில் அடிக்கப்பட்ட கோல் என்று அறிவிக்கப்பட்டது.

பிறகு, போட்டி முடிந்தவுடன் டியாகோ மரடோனா இதுகுறித்து பேசும் பொழுது, 'ஹேண்ட் ஆஃப் காட்' என்று கூறினார். அதாவது 'கடவுளின் கை' என்று பொருள். தனது தலையாலும், கடவுளின் கையின் உதவியாலும் அந்தக் கோலை அடித்தேன் என்று லாபகரமாக பேசினார்.

ஆட்டத்திற்குப் பிறகு மரடோனா இங்கிலாந்து மிட்ஃபீல்டர் ஸ்டீவ் ஹாட்ஜுடன் சட்டையை மாற்றினார். பிறகு, அந்த ஜெர்சி மான்செஸ்டரில் உள்ள இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோத்பி டியாகோ மரடோனா அணிந்திருந்த எண் 10 கொண்ட நீல நிற 'ஹேண்ட் ஆப் காட் ' ஜெர்சி ஏலத்தில் விட்டது.

இந்த ஜெர்சியை ஒருவர் ஆன்லைன் உதவியால் 9.3 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். பிறகு உலகின் மிகவும் விலை உயர்ந்த சட்டை என்று கின்னஸ் உலக சாதனை படைத்தது.

அப்போதிலிருந்து இன்று வரை உலகின் மிகவும் விலை உயர்ந்த சட்டை என்ற உலக சாதனையை மரடோனாவியின் 'ஹேண்ட் ஆப் காட்' என்ற இந்த ஜெர்சி வைத்துள்ளது.

- அ. சரண்.