Asia Cup Asia Cup
Lifestyle

Asia Cup 2023 : 'சூர்யாவ உரசாதீங்க சார்' - ஆசியக் கோப்பையின் Beast Jayasuriya | Pak vs SL

Ayyappan

ஜீரோவா உதறித் தள்ளப்பட்ட ஒருத்தர் ஹீரோவா கம்பேக் கொடுத்துக் கொண்டாடப்பட்டது 2008 ஆசியக் கோப்பைல நடந்தது.....

"சூர்யா சார் உரசாதீங்க"ன்றது சமீபத்துல சூர்யக்குமார் யாதவுக்கு டி20 ஃபார்மட்டுக்கு சொல்லப்படற டயலாக். ஆனா அவருக்கு முன்னாடியே ஒருநாள் ஃபார்மட்டோட ஓப்பனிங் ஓவர்கள டி20-ன் டெத் ஓவர்கள் மாதிரி டீல் பண்ண இன்னொரு சூர்யா இருந்தாரு - சனத் ஜெயசூரியா!

பவர்பிளேன்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்தது 2005ல் தான், ஆனா அதற்குப் பல வருஷங்களுக்கு முன்னாடியே தொடக்க ஓவர்கள்ல ஃபீல்டிங் தளர்வ சாதகமா வச்சுக்கிட்டு அடிச்சு ரன் ஏத்துற டெக்னிக்க இலங்கை கையிலெடுத்து நிறைவேத்துற ஆயுதமா ஜெயசூர்யாவப் பயன்படுத்துச்சு. உண்மையில அதை பவர்ஃபுல் ஓவர்களா ஜெயசூர்யாதான் மாத்துனாரு.

மிடில் ஆர்டர்ல இருந்து ஓப்பனிங்குக்கு நகர்ந்த பிறகுதான் சேவாக் விஷயத்துல நடந்த மாதிரி ஜெயசூர்யாவோட முழு வெப்பமும் வெளிப்பட்டுச்சு. அவரோட க்ரைம் பார்ட்னர் களுவிதராண. 1996 உலகக்கோப்பையே இலங்கையோட அந்த அதிரடி வியூகத்துக்கான பரிசுதான். ஜீரோ ஹேட்டர்ஸ் கொண்ட 90-ஸ் இலங்கை டீம்ல ரணதுங்காவுக்கு அடுத்தபடியா முக்கிய கதாநாயகன் ஜெயசூர்யாதான்.

ஆசியக்கோப்பைல இன்றைய தேதி வரைக்கும் லீடிங் ரன் ஸ்கோரர் ஜெயசூரியாதான். 1997, 2004, 2008 மூணு சீசன்லயும் இந்தியாவை வீழ்த்தி இலங்கை கோப்பையைத் தூக்குச்சு. அதுல இவரோட பங்கு ரொம்பவே அதிகம். 1990ல இருந்து 2008 வரைக்கும் ஆடின சீசன்கள்ல மொத்தம் 1220 ரன்களை அவரோட பேட் குவிச்சிருக்கு. அதுவும் 53.04-ன்ற நம்ப முடியாத ஆவரேஜோடயும் 102.52-ன்ற ஸ்ட்ரைக்ரேட்டோடவும். ஆசியக் கோப்பைல அதிக சதங்கள அடிச்சவரும் அவருதான். இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக தலா மூன்று சதங்கள்னு மொத்தம் ஆறு சதங்கள அடிச்சுருக்காரு.

இதுல குறிப்பாக 2008 சீசன்ல அவரு கொடுத்த கம்பேக்தான் மறக்க முடியாதது. 2008ல ஆசியக்கோப்பைக்கு முன்னாடி ஜெயசூர்யாவோட ஃபார்ம் சற்றே சரிஞ்சது. அதற்கு முன்பாக ஆடுன 20 இன்னிங்ஸ்கள்ல அதிகபட்ச ஸ்கோரே 41 தான். இதனாலேயே இதற்கு முந்தைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்ல கூட அணில அவருக்கான இடம் மறுக்கப்பட்டுச்சு. செட்பேக் எல்லாமே கம்பேக்குக்கான முன் நீளுற வழித்தடம் தானே?

அந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் சார்பாகவும் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் ஆடின போட்டியில அந்த மொத்த கோபமும் தீனிபோட அவருக்குள்ளே உறங்கிட்டு இருந்த மான்ஸ்டர் ரிங் மாஸ்டரா வெளிப்பட்டு மொத்த பௌலர்களையும் ஆட்டிவச்சது. வான்கடே மொத்தமும் வாயடைச்சுப் போக 48 பந்துகள்ல 114 ரன்கள விளாசி துவம்சம் பண்ணிட்டாரு. ஆசியக் கோப்பை அணில அதுக்கப்புறமும் கொண்டு வராவிட்டால் எப்படி? இலங்கை வாரியம் மறுபடியும் அவருக்கு அணிக்குள் வழிவிட்டது.

ஆசியக் கோப்பை தொடருக்கு உள்ள வந்தவர் முன்பு எந்த சீசன்லையும் இல்லாத அளவுக்கு ருத்ர தாண்டவம் ஆடினாரு. ஆடுனது என்னமோ ஐந்தே போட்டிகள்தான் ஆனா அடிச்சது 378 ரன்கள் அதுவும் 126 ஸ்ட்ரைக்ரேட்ல. இதுல ரெண்டு சதங்களும் அடக்கம். அதுல ஒன்னு பங்களாதேஷுக்கு எதிரா வெறும் 55 பந்துகள்ல வந்து மிரட்டுச்சு. இது நடந்து இத்தனை சீசன்கள் ஆகியும் ஒரே சீசன்ல அதிக ரன்கள் அடிச்சவர்னு ஜெயசூர்யா பண்ண சாதனைய இன்னமும் யாராலும் முறியடிக்க முடியல.

வெஸ்ட் இண்டீஸ் டூர்ல வெளியே உட்கார வச்சது ஜெயசூர்யாவ தூண்டி இன்னமும் அவரோட டெம்பரேச்சர கூட்டி விட்டுடுச்சு. ஃபைனல்லயும் அவரோட அக்ரஷனும் மெண்டீஸோட மேஜிக்கும் சேர்ந்துதான் கோப்பையை இலங்கைய வெல்ல வச்சது.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr