Ian Chappell
Ian Chappell Ian Chappell
Lifestyle

Australia : அடாவடிக்குப் பேர் போன Ian Chappell - Thuglife Cricketer | Epi 8

Ayyappan

ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் ஆக்ரோஷத்துக்குப் பேர் போனவங்கன்னா இயான் செப்பல் அடாவடிக்குப் பேர் போனவர்.

70-ஸ் கிரிக்கெட், நிறைய பருத்திவீரர்களோட படலத்த பார்த்தது. டி20 மாதிரி அடிக்கடி அடிக்கப்படற சிக்ஸர்கள் அன்றைக்கு கிரிக்கெட்ட சுவாரஸ்யமா ஆக்கத் தேவைப்படல ஏன்னா அந்த வீரர்களோட ஆளுமையே அத்தனையுமா இருந்துச்சு. அப்படிப்பட்டவர்கள்ல ஒருத்தரோட Past-ஐதான் தோண்டி எடுக்கப் போறோம்.

தூக்கிவிடப்பட்ட காலர், உடலசைவுலயே தென்படற தெனாவட்டு, எந்த எதிரணியா இருந்தாலும் வந்து பாருன்ற தீரம், தவறுன்னு தெரிஞ்சா அது யாரிடம் எங்கேனுலாம் யோசிக்காம முட்டி மோதுற தைரியம் எல்லாத்துக்கும் மேல இணையற்ற கேப்டன் இப்படின்னு தக் லைஃபோட பத்துப் பொருத்தமும் பக்காவா பொருந்திப் போனவரு இயான் செப்பல்.

தன்னோட பதினாறாவது வயசுல தென் ஆஸ்திரேலியா அணில விளையாட வாய்ப்புக் கிடைச்சதும் செப்பல் ஒரு காகிதத்துல எழுதிவச்ச வாசகம், "ஒருநாள் நான் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆவேன்"ன்றதுதான். எழுதிவச்சது பத்திரமா பர்ஸுலயே இருக்க அதை நடத்திக்காட்ட செப்பலுக்கு 10 ஆண்டுகள்தான் ஆச்சு.

Lawry-கிட்ட இருந்த கேப்டன்ஷி செப்பல் கைக்கு மாறுனப்போ ஆஸ்திரேலியா பலவீனமா இருந்துச்சு. அதற்கு முந்தைய 10 போட்டிகள்லயும் வரிசையா தோத்திருந்துச்சு. அந்த அணிய கரெட்க்டா செட் பண்ணி இங்கிலாந்துக்கு போய் ஆஷஸை டிரா பண்ணாரு. ஒரு போட்டியக்கூட வெல்ல வலுவில்லாம இருந்த அணிய சகலவல்லமையுள்ளதா மாத்துனாரு.

தனக்கு இந்த வீரர்கள்தான் வேணும்ன்றது ரொம்பக் கண்டிப்பா இருப்பாரு செப்பல். ஒருதடவ இவரு போட்டில ஆடிட்ருந்தப்போ மீதமிருந்த போட்டிகளுக்கான வீரர்கள் இவர்ட்ட கேட்காமலே அறிவிக்கப்பட கோபத்துல மிச்சமிருந்த போட்டிகள்ல ஆடமாட்டேனு எதிர்ப்பு தெரிவிச்சாரு. இவரோட சேர்ந்து மற்ற வீரர்களும் எதிர்க்க போர்டு உண்மைலயே ஆடித்தான் போச்சு, ஏன்னா அப்படிப்பட்ட ஒரு கேப்டன அவங்க அதுக்கு முன்னாடி பார்த்ததில்ல. அதிகார வர்க்கத்த எதிர்க்க தயங்குனதே இல்ல.

வீரர்கள்ட்ட எப்படி அவங்க பெஸ்டை வெளிய கொண்டு வரணும்ன்றதுலயும் சாமர்த்தியமானவரு. ஒரு தொடர்ல லில்லி சரியா பெர்ஃபார்ம் பண்ணல, அவரு கைகொடுக்க வந்தப்போ செப்பல், "நான் ஃபாஸ்ட் பௌலர்களுக்கு மட்டும்தான் கை கொடுப்பேன்"னு சொல்லி அவரோட ஈகோவ வேணும்னே தூண்டிவிட அதுக்கடுத்த தொடர்ல வெறிகொண்டு வீசி விக்கெட் வேட்டையாடினாரு லில்லி. புல் ஷாட்டுக்குப் பேர்போன செப்பலை, தான் பார்த்ததுலயே ஸ்பின்னை சிறப்பா எதிர்கொண்ட வீரர்னு எரபள்ளி பிரசன்னா சொல்லிருந்தாரு.

ஒருதடவ செப்பல் களத்துல பேட்டிங் பண்ணிட்ருக்க அவரோட சகோதரரான கிரேக் செப்பல் ஸ்ட்ரைக்ல இருந்த 11-வது வீரருக்கு பவுன்சரா வீசி பயமுறுத்திட்ருந்தாரு. அதுக்கு செப்பல், "பவுன்சர் போடனும்னா எனக்குப் போடு, என் பௌலருக்கு ஏன் போடற"னு அவரை அரட்டுனாரு. அதேசமயம் தனது அணி வீரர்களே தப்புப் பண்ணாலும் பார்த்துட்டிருக்க மாட்டாரு. ரே ஜோர்டான்ற அவரோட விக்கெட் கீப்பர் பந்தில்லாம வெறும் கையால ஸ்டம்பிங் பண்ணிட்டு விக்கெட் விழுந்ததா ஆடுன நாடகத்தப் பார்த்துட்டு அவர அடுத்த சிலபோட்டிகள்ல அணிக்குள்ளயே அனுமதிக்கல.

செப்பலுக்கு ஜெயிக்கனும்னது தவிர வேறெந்த விஷயத்துலயும் உடன்பாடில்ல. தோக்குறதுக்கு ஆடாமலே இருந்துடலாம்னு அடிக்கடி சொல்லுவாரு. அவருக்குள்ள இருந்த அந்த ஆக்ரோஷம்தான் அணிக்குள்ளயும் கடத்தப்பட்டுச்சு. அதுதான் ஆஸ்திரேலியாவோட டீம் கல்ச்சராவே உருவாச்சு. அணிய ஜெயிக்குற குதிரையா மாத்துனது மட்டுமில்ல அடுத்த பல ஆண்டுகளுக்கும் அச்சுறுத்தக் கூடியதாகவும் அவரோட தலைமை மாத்தி வச்சது.

ஆஸ்திரேலிய அணிட்ட எந்த இடத்துல அந்த அடாவடித்தனம், ஸ்லெட்ஜிங், விடாம மோதுற மைண்ட் செட் இதெல்லாம் பார்த்தோம்னாலும் அதுல செப்பலோட சாயல் கொஞ்சமா எஞ்சியிருக்குன்றதுதான் உண்மை.