Kapil Dev
Kapil Dev timepass
Lifestyle

BCCI : 'யாரைக் கேட்டு போனீங்க?' - Kapil Dev, Ravi Shastri, Azharuddin நீதிமன்றம் ஏறிய கதை!

Ayyappan

மற்ற நாட்டு டி20 லீக்கள்ல போய் நம்ம கிரிக்கெட்டர்கள் ஆடக்கூடாதுனு பிசிசிஐ கிடுக்குப்பிடி போடுறது இன்னைக்கு நேத்து இல்ல, பல வருஷமாவே நடந்துட்டு இருக்கு.

உலகக்கோப்பைய ஆஸ்திரேலியா ஜெயிச்சதுக்கான முக்கிய காரணங்கள்ல ஒன்னா சுட்டிக் காட்டப்பட்டது அவங்க பிட்சை சுலபமா கணிச்சதும், அதுக்கு முழுமுதல் காரணமா ஐபிஎல் இருந்ததும் தான். அதனால பிசிசிஐயும் மனசு வச்சு நம்ம வீரர்கள வெளிநாட்டு டி20 லீக்கள்ல ஆடவிடணும், கவுண்டில ஆடிக் கிடைக்கற அனுபவத்த இதுலேயும் கிடைக்கச் செய்யனும்ன்ற கோரிக்கைகள் ஏற்கனவே எழ ஆரம்பிச்சாலும், பிசிசிஐ அதைப்பத்தி மூச்சு விடல.

அவங்களப் பொறுத்தவரை இந்திய வீரர்கள் வேறு நாட்டு லீக்கள்ல ஆடுறதுல அவங்களுக்கு உடன்பாடே இல்லை. தேவைப்படறத நானே கொடுத்துடறேன், எங்கேயும் போகாதே அப்படின்ற செக் தான் அது. இது இப்போனு இல்ல, இப்பவிட பலமடங்கு குறைந்த சம்பளத்த இந்திய வீரர்கள் வாங்கிட்டு இருந்த 1989லயே நடந்தது.

1989-ல வெஸ்ட் இண்டீஸுக்கான எதிரான தொடர்ல மோசமான தோல்விய இந்திய அணி பெற்றது. இப்போ மாதிரி அடுத்தடுத்த தொடர் இல்லாத நிலை. அந்தக் காரணத்தால கபில் தேவ், ரவி சாஸ்திரி, அசாருதீன், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ராபின் சிங் உள்ளிட்ட வீரர்கள் ஓர் அணியாக இணைந்து அமெரிக்கா மற்றும் கனடால போய் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நான்கு ஃப்ரெண்ட்லி மேட்சஸ் ஆடுனாங்க.

முக்கிய காரணம், இன்றைய டி20 லீக்கள் மாதிரி பணம் கொட்டிக் கொடுக்கப்பட்டதுதான். பல நாட்கள் உழைப்புக்கு பிசிசிஐ தர்றத விட பலமடங்கு பணத்த இரு நாட்கள் நடைபெற்ற அந்த சின்ன டூர் தந்துடுச்சு. சந்தோஷமா இந்தியா வந்தவங்களுக்கு அதிர்ச்சி தர பிசிசிஐ வெறியோட காத்திருந்தது.

ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்து, "யாரைக் கேட்டு போனீங்க, ஏன் போனீங்க, எப்படி போனீங்க?"ன்னு கேள்விகளால துளைச்சு எடுத்துடுச்சு. சரி என்ன பண்ணிடப் போறாங்க, மிஞ்சிப் போனா ஃபைன் போடுவாங்க, சம்பாதிச்சுட்டு வந்த பணத்துல ஒரு பகுதிய கட்டிட்டுப் போலாம்னு வீரர்கள் நினைச்சாங்க. பிசிசிஐ ஃபைனும் போட்டுச்சு கூடவே ஓராண்டு அந்த வீரர்கள் விளையாட தடையும் போட்ருச்சு. அந்த வீரர்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியில உறைஞ்சுட்டாங்க. இது பின்னாடி ப்ரவீன் தம்பேவுக்குக் கூட நடந்திருக்குன்னாலும் அது ஒரு வீரர் விஷயத்துல மட்டும் நடந்தது. ஆனா இது கூண்டோடு கைலாசம் கதைதான்.

பதறாம சிதறாம ஒற்றுமையோட ஒட்டுமொத்த வீரர்களும் மொகீந்தர் அமர்நாத் தலைமைல சுப்ரீம் கோர்ட அணுகுனாங்க. காரசாரமா இந்த விளையாட்டுக்குள்ள துளிர்விடத் தொடங்கி இருந்த அரசியலை நீதிபதிகள் வன்மையாகக் கண்டிச்சாங்க. கொஞ்சமா இழுபறி ஆனாலும் தீர்ப்பு வீரர்களுக்கு சார்பாகத் தான் வந்தது. கைகாசை செலவழிச்சாலும், தங்களுக்கான நியாயத்த வீரர்கள் போராடி வாங்குனாங்க.

தனது வீரர்களுக்குத் தேவையானத கொடுத்து தானே நன்றாகப் பார்த்துக்கிடவே இந்த விதினு பிசிசிஐ சொல்றது ஒரு பார்வைனாலும், இப்படிப்பட்ட டி20 லீக்கள் தானே ஆஃப்கானிஸ்தான் மாதிரி ஒரு நாட்டு வீரர்கள புடம் போட்டு தங்கமா மாத்திட்டு இருக்கு. அதையே ஏன் இந்திய வீரர்களுக்குமான வாய்ப்பாக பிசிசிஐ உருவாக்கக் கூடாதுன்ற கேள்வியும் எழாமல் இல்லை.