Beer  Beer
Lifestyle

கழிவு நீரிலிருந்தும் பீர் தயாரிக்கலாமா? - Beer பிரியர்கள் அதிர்ச்சி !

சு.கலையரசி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு நீர் சுத்திகரிப்பு நிறுவனம் ஒரு மதுபான ஆலையுடன் சேர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைக் கொண்டு பீர் தயாரிக்கும் முயற்சி எடுத்துள்ளது.

எபிக் களீன்டெக் என்ற நீர் சுத்திகரிப்பு நிறுவனம் எபிக் ஒன்வாட்டர் ப்ரூ என்ற பீர் கம்பெனியுடன் சேர்ந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள 40-அடுக்கு கட்டிடமான ஃபிஃப்டியில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைக் கொண்டு பீரைத் தயாரித்துள்ளது. இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பீர் முற்றிலும் பாதுகாப்பானதாம்.

எபிக் க்ளீன்டெக் ஒரு நாளுக்கு 7,500 கேலன் தண்ணீரையும் ஆண்டுக்கு 2.75 மில்லியன் கேலன் தண்ணீரையும் மறுசுழற்சி செய்யும் நிறுவனம்.

பீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சாம்பல் நீரானது, பெரும்பாலும் சலவை மற்றும் குளியலறையில் இருந்து சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் கட்டிடத்திற்குள் கழிப்பறை பயன்பாட்டிற்காக மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மிகவும் சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது. குடிநீரை விட சுத்திகரிக்கப்பட்ட நீர் மிகவும் சுத்தமானது என்பதனால் இதில் தயாரிக்கப்பட்ட பீர் தூய்மையானது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, "இதை சட்டப்பூர்வமாக விற்க முடியாது. மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் வணிக ரீதியாக விற்கப்படுவது தடைசெய்யப்பட்டது. அதற்கு பதிலாக, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குடிக்க பயன்படுத்தாமல் சலவை இயந்திரங்கள் அல்லது கழிப்பறைகளுக்கான விநியோகத்திற்கு பயன்படுத்தலாம்." என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.