police timepass
Lifestyle

'கார்டு மேலே இருக்க 16 நம்பர் சொல்லு சார்...' - டிவி வழியாக நூதனத் திருட்டு !

'காக்கிச்சட்டை என்றாலே ரத்தம் மட்டும்தானா ? தக்காளிச் சட்னியும் தான். கொஞ்சம் காமெடியான சம்பவங்களும் எங்களுக்கு உண்டு!' என்ற சொன்னார்கள் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள். இதோ அப்படி ஒரு சம்பவம்...

Saran R

'காக்கிச்சட்டை என்றாலே ரத்தம் மட்டும்தானா ? தக்காளிச் சட்னியும் தான். கொஞ்சம் காமெடியான சம்பவங்களும் எங்களுக்கு உண்டு!' என்ற சொன்னார்கள் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள். இதோ அப்படி ஒரு சம்பவம்...

"பண்டிகை நாள் லோக்கல் கேபிள் சேனலுக்கு டயல் செஞ்சி பாட்டுக் கேட்டிருக்காரு ஒரு ஆளு. அது ரெக்கார்ட் டெலிகாஸ்ட். 'ஹலோ எனக்கு ஜிகர்தண்டா படத்துல இருந்து புழுதி பறக்கும் பாரு பாட்டு போடுங்க'னு கேட்டிருக்கார். 

'வாவ் சூப்பர். அந்தப் படத்தோட ஹீரோயின் யார்?' என அந்த காம்பியர் கேட்டிருக்கார். 'லட்சுமி மேனன்க!'னு சிரிச்சுக்கிட்டே இவங்க சொன்னதும், 'இன்னிக்கு கால் பண்ண நேயர்கள் சிலருக்கு பணமா பரிசு தர்றோம். உங்களுக்கு 25,000 ரூபாய்ய்ய்ய்ய்ய்! ப்ளீஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்ஸ்!' என லைவில் கைதட்டி வாழ்த்து சொல்லியதைப்போல சொல்லியிருக்கார்.

பாட்டு போட்ட கேப்புல அந்த ஆளுக்கு போன் பண்ணி அக்கவுண்ட் நம்பர் பாஸ்வேர்ட் எல்லாம் கேட்டிருக்கார். இப்படி அன்னிக்கு மட்டும் பத்து பேர்கிட்ட 'ஷோ 'வில் பேசி ஆட்டையைப் போட்டு இருக்காங்க. பணத்தைப் பறிகொடுத்த ஆட்கள் சம்பந்தப்பட்ட அந்த கேபிள் நிறுவனத்துக்கு போனா... 'என்ன சொல்றீங்க? நாங்க அப்படி ஒரு நிகழ்ச்சியையும் நடத்தலையே ?'னு சொல்லி இருக்காங்க.

அப்புறமா விசாரிச்சா அங்கே வேலை பார்க்குற ஒருத்தன் அன்னிக்கு 'சிறப்பு நிகழ்ச்சியை ' பக்காவா ப்ளான் போட்டு டீமா நடத்தி இருக்கான். ஆளும் டீமோட எஸ்கேப் ஆகி இருக்கான். நல்ல வேளையா வெளிமாநிலத்துக்கு எஸ்கேப் ஆகுறதுக்குள்ள மொத்தமா மடக்கிட்டோம்!''