chennai
chennai timepass
Lifestyle

Chennai : பெண்களுக்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்!

டைம்பாஸ் அட்மின்

நம்ம இந்தியாவில் இருக்கக்கூடிய பெண்கள், தென்னிந்திய நகரங்களுக்கு குடிப்பெயர ரொம்பவும் விருப்பம் தெரிவிச்சி இருக்காங்க. ரீசண்டா நடந்த கணக்கெடுப்புல பெண்கள் குடிப்பெயர நினைக்கக்கூடிய நகரங்கள்ல சென்னை முதலிடத்திலும், டெல்லி 14-வது இடத்திலும் இருக்கு..

இந்த வரிசையில் முதல் 10 இடத்துல மூன்று இடத்தை தமிழ்நாட்டு நகரங்கள் தான் பெற்று இருக்கு. அது மட்டும் இல்லாம ஒரு மில்லியனுக்கும் குறைவா இருக்கக்கூடிய மக்கள் தொகை கொண்ட பிரிவுல முதல் ஐந்து இடத்தை தென் மாநிலத்த சேர்ந்த நகரங்கள் தான் பெற்று இருக்கு..

சமீபமா எடுத்த கணக்கெடுப்பில பெண்கள் வேலைக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் குடிப்பெயர நினைக்கக்கூடிய நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தேசிய தலைநகரான புதுதில்லி மாதிரியான வடமாநிலங்களை விட தென்னிந்திய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரங்கள்ல வசிக்கவும், வேலை செய்யவும்தான் பெண்கள் விரும்புறாங்கனு இந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிது.

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ஜனத்தொகை இருக்கக்கூடிய பிரிவில முதல் 10 நகரங்கள் சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் மதுரை இடம்பெற்றிருக்கு. அவதார் அப்படிங்கிற பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்கம் தீர்வுகள் நிறுவனம் "வியூபோர்ட் 2022 - இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்" அப்படிங்கிற கணக்கெடுப்ப நடத்தினாங்க..

1 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை இருக்க சிறிய நகரங்கள் லிஸ்ட்ல, திருச்சிராப்பள்ளி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி போன்ற நகரங்கள் பெண்களுக்கான குடிப்பெயர ஏற்ற இடங்களா இடம்பெற்றிருக்கு..

'இந்தியாவுல மற்ற மாநில நகரங்களை விட தமிழ்நாட்டு நகரங்களுக்கு தான் பெண்கள் வேலைக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் குடிப்பெயர நினைக்கிறார்கள்'னு கணக்கெடுப்பு மூலமா நமக்கு தெரிய வந்திருக்கு.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்கக்கூடிய பிரிவில சென்னை தான் முதலீடுத்த 78.41ன்ற மதிப்பெண்ணில் பெற்றிருக்கு. அதே மாதிரி ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை இருக்கக்கூடிய பிரிவில திருச்சிராப்பள்ளி 71.61ன்ற மதிப்பெண்ணில் முதல் இடத்தை பெற்று இருக்கு.

இந்த வரிசையில் பட்டியல்ல ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்கக்கூடிய பிரிவில முதல் 10 இடங்களில் மூன்று இடங்கள் தமிழ்நாட்டை சார்ந்த நகரங்கள். அதே மாதிரி ஒரு மில்லியனுக்கும் குறைவா இருக்கக்கூடிய மக்கள் தொகை கொண்ட பிரிவுல 5 நகரங்கள் நம்ம தமிழ்நாட்டை சார்ந்தவை.

"எங்க இருக்கு எங்க இருக்கு எங்க இருக்கு ஐ இந்தா இருக்கு" அப்படிங்கற மாதிரி நாட்டோட தலைநகரமான புதுடெல்லி இந்த வரிசை பட்டியல்ல 14வது இடத்தில் இருக்கு. டெல்லி சென்னையை விட 30 மார்க் கம்மியா எடுத்து இருக்கு. இந்த கணக்கெடுப்புல முதல் 25 இடங்கள பெற்றிருக்க நகரங்கள்ல பல மாநிலத்தினுடைய தலைநகரங்கள் இடம் பெறல ! இது வியக்கத்தக்க விஷயமும் இல்லை ! அப்படின்னு இந்த கணக்கெடுப்ப நடத்துனவங்க சொல்லி இருக்காங்க.

இந்த வரிசையில் எந்தெந்த மாநிலத்துடைய தலைநகரங்கள் இடம் பெற்று இருக்குனு பார்க்கலாம் : தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஒடிசா இந்த மாநிலங்களுடைய தலைநகரங்கள் தான் இந்த வரிசையில் இடம் பெற்று இருக்கு.

இந்த வரிசையில் மாநிலத்தினுடைய தலைநகரம் இடம்பெறாததற்கு அந்தந்த நகரங்கள் அரசியல் சார்ந்த விஷயங்களை கவனம் செலுத்துவது ஒரு முக்கியமான ஒரு காரணியா இருக்கு.. அதே மாதிரி பெண்களுக்கு நட்பான நகரங்களாக அமையலன்றது பெண்களே சொல்லக்கூடிய கருத்தா இருக்கு.

இந்த சர்வே எடுத்த அவ்தார் நிறுவனத்துடைய நிறுவனர் சவுந்தர்யா ராஜேஷ் , "வரலாற திருப்பி பார்த்தால் தென்னிந்திய மாநிலங்கள்தான் பெண்களுக்கு ஏற்ற மாநிலங்களாக இருந்திருக்குன்றது நமக்கே தெரியும். நம்மளுடைய வரலாற்ற படிக்கும் போதே நமக்கு தெரிந்திருக்கும் வடமாநிலங்கள் பெரும்பாலும் போர், போராட்டங்கள் சார்ந்த விஷயங்கள்ல தான் கவனம் செலுத்திட்டு இருப்பாங்க. ஆனால் தென் மாநிலத்தில் இருக்கக்கூடிய நகரங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சி பண்ணிட்டு இருப்பாங்க.

அப்ப இருந்து இப்ப வர பெண்களுக்கான ஏற்ற மாநில நகரங்களா இருக்கிறது தென் மாநில நகரங்கள் தான் அப்படின்றது வரலாற்றிலும் தெரியுது இப்ப எடுத்திருக்க இந்த கணக்கெடுப்புலயும் தெரியுது.

ஐக்கிய நாடும் பெண்களுக்கு ஏற்ற நட்பான நகரங்களுக்கான பட்டியல் சார்ந்த சில கூற்றுக்களை வச்சிருக்காங்க. பெண்களுக்கு சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள், விரிவான நகர்ப்புற சமூக சேவை அமைப்பு மற்றும் பாதுகாப்பு வழங்குவது இதெல்லாம் தான் நட்பான நகரங்களுக்கான கூற்றுகளா ஐக்கிய நாடு வைத்திருக்கு.

என்னதான் நம்ம நாட்டோட தலைநகரமான புதுடெல்லியில் வியக்கத்தக்க விஷயங்கள் பல இருந்தாலும் அதாவது மெட்ரோ, கல்வி நிறுவனங்கள் அப்படின்னு நிறைய விஷயங்கள் இருந்தாலும், குற்றம்னு வரும்போது டெல்லியில் நடக்காத குற்றங்களே இல்லைனு சொல்லலாம்.. அதுவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எக்கச்சக்கமாக நடந்துட்டிருக்கு. பெண்களுக்கான பாதுகாப்பு முறையா இல்ல மேலும் அங்க வந்த வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு சரியான விடுதி வசதியும் இல்ல அப்படின்னு சௌந்தர்யா ராஜேஷ் சொல்லி இருக்காங்க.

111 நகரங்களில் 783 பெண்கள் கிட்ட எடுத்த கணக்கெடுப்புல தான் இந்த நகரங்கள் பட்டியால் வெளியிடப்பட்டிருக்கு. பல விஷயங்களின் அடிப்படையில் தான் இந்த மதிப்பெண்கள் நகரங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சமூக சேர்க்கை, தொழில்துறை சேர்க்கை, பெண்களின் வாழ்க்கை வசதி, பாதுகாப்பு & நகர வசதிகள் இந்த அம்சங்களுக்கு 80% மார்க் & பெண்களுக்கான வேலைவாய்ப்பு எங்க கிடைக்குது அப்படின்ற அம்சத்திற்கு 20% மார்க்னு தனித்தனியா அலாட் பண்ணி தான் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கு.

இந்த கணக்கெடுப்பு அடிப்படையில தமிழ்நாட்டோட தலைநகரம் சென்னை முதலிடத்திலயும், நம்ம நாட்டுடைய தலைநகரம் 14வது இடத்தில் இருக்கிறது ரொம்பவே ஷாக்கான மற்றும் சந்தோஷமான விஷயமா தான் இருக்கு !!!

இந்த கணக்கெடுப்புடைய முடிவுக்கு அப்புறம் எல்லா மாநிலங்களும் பெண்களுக்கு ஏற்ற இடமா அமையனும்ன்ற நோக்கத்தோடு செயல்படுவாங்கனு எதிர்பார்க்கப்படுது !! நாமளும் வெயிட் பண்ணி பார்க்கலாம் !!

- நெ.ராதிகா.