Chess  Chess
Lifestyle

Chess World Cup : 33 கோடி மதிப்பிலான சதுரங்க செட் - இவ்வளவு விலைக்கான காரணம் என்ன?

செஸ் செட் தான் உலகில் மிக மதிப்புமிக்கதாக உள்ளது. இது 18 காரட் வெள்ளை தங்கத்தாலும் 510 காரட் கொண்ட தங்கத்தாலும் செய்யப்பட்டுள்ளது.

டைம்பாஸ் அட்மின்

33 கோடி சதுரங்க செட்!

பேர்ல் இராயல் (The Pearl Royale) என்ற செஸ் செட் தான் உலகில் மிக மதிப்புமிக்கதாக உள்ளது. இது 18 காரட் வெள்ளை தங்கத்தாலும் 510 காரட் கொண்ட தங்கத்தாலும் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீல நிற சபையர் கற்களை கொண்டும் தென்கடல் முத்துக்களை கொண்டும் செய்யப்பட்டுள்ளது. இந்த செஸ் செட்டின் வுலை சுமார் 4 மில்லியன் டாலர்கள் மதிப்புக் கொண்டது. அதாவது, இந்திய மதிப்பின் படி சுமார் 33 கோடியாகும்.

இந்த மதிப்புமிக்க செஸ் செட்டை ஆஸ்திரிலியாவை சேர்ந்த நகை தாயாரிப்பாளரான காலின் பர்னால் வடிவமைத்து தயாரித்தார். இது மிகவும் தனித்துவமானது மற்றும் ஆடம்பரமானது. இந்த செஸ் செட் 1849 ஆண்டு புகழ்பெற்ற ஸ்டான்டன் செட்டை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

”சதுரங்கம் அனைத்து சமூகங்களையும் கலாச்சாரங்களையும் அனைத்து பின்னணியில் இருந்து வரும் மக்களையும் ஒன்று சேர்க்கும். போட்டியில் வெற்றி தோல்வியோ அதெல்லாம் தவிர்த்து மரியாதையைக் காட்ட கைக்குலுக்குகிறோம்.” என்று இதை தயாரித்த காலின் பர்னா கூறியுள்ளார்.

பேர்ல் ராயல் இதுவரை மொத்தம் 3 செட் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று செட்களையும் காலின் பர்னேலே அவராகச் செய்துள்ளார். இந்த பேர்ல் ராயல் செஸ் செட் உலகில் நகைகளால் செய்யப்பட்ட பொரிட்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா தான் இந்த பேர்ல் ராயல் செஸ் செட்டில் விளையாடிய முதல் வீரர். இவரை தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் ராபர்ட் ஹெஸ் மற்றும் இண்டர்நேஷனல் மாஸ்டர் டேனி ரென்ச் விளையாடினார்கள்.

இவர்கள் மூவர்கள் மட்டும் தான் இதுவரை இந்த விலையுயர்ந்த பேர்ல் ராயல் செஸ் செட்டில் விளையாடி உள்ளார்கள். இந்த அற்புதமான பேர்ல் ராயல் செஸ் செட் 2019-ல் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ்-ல் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்டது.

- மா. இராகேஷ் சர்மா.