China timepass
Lifestyle

China : போர்வை கேட்ட விமான பயணி - கலாய்த்த ஊழியர்கள் பணிநீக்கம் !

என்னதான் அவர் பிளாங்கெட்டுக்கு கார்பெட்னு சொன்னாலும் நைட்டு நேரத்துல பிளாங்கெட்டு தான் கேப்பாங்கன்ற எண்ணம் இல்லாம பயனிய அவமதிச்சு இருக்காங்க.

ராதிகா நெடுஞ்செழியன்

பிளாங்கெட்னு சொல்றதுக்கு கார்பெட்னு சொல்லிட்டாராம்.. சைனீஸ் விமானத்துல பயணம் செஞ்ச பயணிய கலாய்ச்சி வேலையை இழந்துட்டாங்க 3 விமான பணிப்பெண்கள்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு சீன நகரமான செங்டுவில இருந்து ஹாங்காங் போற கேக்தே பசுஃபிக் நிறுவன CX987 விமானத்துல பயணம் செஞ்ச ஒரு பயணி, இங்கிலீஷ்ல போர்வைக்கு(Blanket) பதிலாக கம்பளம்னு(carpet) கேட்டுட்டாராம்.. இவர விமானப் பணிப்பெண்கள் கேலி செஞ்சிருக்காங்க.

கேக்தே பசுஃபிக் நிறுவனத்த சார்ந்த இந்த விமானத்துல பயணம் செஞ்ச பயணி விமானத்துல வேல செய்யற பணி பெண்கள் கிட்ட போர்வை வேணும்ன்றத ஆங்கிலத்துல கேட்க தெரியாம.. ப்ளாங்கெட்ன்ற வார்த்தைக்கு பதிலா கார்பெட்னு கேட்டுட்டாரு. 'பிளாங்கெட்ன்ற வார்த்தைய உங்களால இங்கிலீஷ்ல சொல்ல முடியலையா?? கார்ப்பெட் தரையில தான் இருக்கு.. வேணும்னா அதுல உங்க இஷ்டத்துக்கு படுத்து உருளுங்கனு' ஆங்கிலம் பேச தெரியாத அந்த பயணிய மூன்று விமான பணிப்பெண்கள் கலாய்ரச்சி இருக்காங்க.

இந்த சம்பவத்தை சக பயணி ஒருத்தர் வீடியோ எடுத்து அவருடைய சோசியல் மீடியா பக்கத்துல வெளியிட்டு இருக்காரு.

என்னதான் அவர் பிளாங்கெட்டுக்கு கார்பெட்னு சொன்னாலும் நைட்டு நேரத்துல பிளாங்கெட்டு தான் கேப்பாங்கன்ற எண்ணம் இல்லாம பயனிய அவ மதிச்சு இருக்காங்க. இந்த சம்பவம் சீன மக்கள் மத்தியில ரொம்பவே வைரல் ஆச்சு..

இந்த சம்பவத்த பத்தி கேக்தே பசுஃபிக் நிறுவனத்தின் சேவை வழங்கல் இயக்குனர் மேன்டி என்ஜி, 'இந்த மாதிரியான செயல்கள நிறுவனம் ஊக்குவிக்கிறதில்ல.. இந்த செயல் பணியாளர்களுடய சகிப்புத்தன்மை ரொம்ப குறைவா இருக்கிறத காட்டுது .. இந்த மாதிரியான செயல்கள் இதுக்கு மேல நடக்காம பாத்துக்கிறோம்... அது மட்டும் இல்லாம பயணிய அவமதிச்ச மூன்று பணிப்பெண்களயும் நாங்க வேலையில இருந்து நீக்கிறோம்'னு சொல்லி இருக்காரு....

கலாய்ச்சி சிரிச்ச பணி பெண்களுக்கு செம பல்பு கொடுத்து இருக்காரு கேக்தே பசுஃபிக் நிறுவனத்துடய சேவை வழங்கல் அதிகாரி..