சீனா
சீனா டைம்பாஸ்
Lifestyle

புது தம்பதிகளுக்கு ஊதியத்து விடுமுறை : மக்கள் தொகையை அதிகரிக்க சீனா திட்டம்!

சு.கலையரசி

கடந்த ஆண்டு சீனா தனது மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைப் பதிவு செய்தது. அதாவது 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள். குறைந்த அளவு மக்கள் தொகையே இருப்பதால் மக்கள் தொகையை அதிகப்படுத்த சீனா புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குகின்றது.

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தினால் சில சீன மாகாணங்கள் இளம் திருமணத்தை ஊக்குவித்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புகளை வழங்கியுள்ளது. சீனாவின் மற்ற சில மாகாணங்களான கன்சு மற்றும் ஷான்சி 30 நாட்களையும், ஷாங்காய் 10 நாட்களையும், சிச்சுவான் 3 நாட்களையும் திருமண விடுமுறையாக தருகிறது.

இதுமாதிரி திருமண விடுமுறையை அளிப்பது கருவுறுதல் விகிதத்தை அதிகரிப்பதற்கான பயனுள்ள வழிகளில் ஒன்று என்று தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங் கூறினார்.

ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறை நாட்டின் பொருளாதாரத்தையும் வேலை செய்வதையும் வெகுவாகவே பாதிக்கும் இருப்பினும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இந்த விடுமுறையுடன் சேர்த்து வீட்டு மானியங்கள் போன்ற மற்ற பிற வழிகளும் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

சீன நாட்டில் குறைந்த மக்கள்தொகையே நீடிப்பதால், சீன விந்தணு வங்கிகளானது கல்லூரி மாணவர்களையும் ஆரோக்கியமான ஆண்களையும் விந்தணு தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விந்தணு தானம் திருமண விடுமுறை போன்றவை மட்டும் மக்கள் தொகையை அதிகரிக்க போதாது. இது மாதிரியான மற்ற பிற வழிகளையும், கருவுறுதலின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.