China
China  timepass
Lifestyle

China : காதலர்கள் முத்தம் கொடுக்க Remote Kissing Device !

Zulfihar Ali

வெளியூர்ல இருக்கிற மனைவிக்கோ காதலிக்கோ முத்தம் கொடுக்க நினைச்சா இனி நிஜமாவே கொடுக்கலாம். அதுக்கு இப்போ புதுசா இப்போ மெஷின் கண்டுபிடிச்சிருக்காங்க. 
ரிமோட் கிஸ்ஸிங் மெஷின் இதான் அதோட பேரு. அதாவது இந்த மெஷின்ல வாய் வச்சு முத்தம் கொடுத்தா வெளியூர்ல இருக்கிறவங்களுக்கு நிஜமாவே முத்தம் கொடுத்த உணர்வு வருமாம்.  

அதே மாதிரி அந்தப்பக்கம் முத்தத்தை ரிஸீவ் பண்றவங்களுக்கும் அதே ஃபீல் கிடைக்குமாம். இதுக்காக ஒரிஜினல் வாய் மாதிரியே ஸ்பெஷல் சிலிகான்ல இதை டிஸைன் பண்ணிருக்காங்க. அந்த நிஜ உணர்வை கொண்டுவர பிரஷர் சென்சாரும் இதுல பொருத்திருக்காங்க.  

ஜியாங் சோங்லிங்கிற சீனர்தான் இதை கண்டுபிடிச்சிருக்கார். அவர் கல்லூரி நாட்கள்ல தனியா வெளியூர்ல இருந்தப்போ காதலியை ரொம்ப மிஸ் பண்ணினாராம். அப்போதான் இந்த கண்டிபிடிப்புக்கான ஐடியா அவருக்கு தோணுச்சாம்.

2016 கிஸ்ஸின்ஜர்னு மலேசியால இதே மாதிரி ஒரு மெஷின் கண்டுபிடிச்சாங்க. ஆனா அதுல இந்த மாதிரி அவ்ளோ சிறப்பம்சம் இல்லையாம். இந்த புது மெஷின் அதுக்கெல்லாம் அப்பன்னு சொல்றாங்க. அதனால மக்கள்கிட்ட இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.

விற்பனையிலையும் சக்கை போடு போடுதாம். சீன பணம் 260 யுவானுக்கு அதாவது நம்மூரு காசுக்கு ரூ. 3,000 ரூபாய்க்கு இந்த கருவி இப்போ கிடைக்குது.  இனி 'சில்லுனு ஒரு காதல்' சூர்யா, பூமிகா மாதிரி போன்ல நொச்சு நொச்சுனு சாதா முத்தமா கொடுக்காம இதை வாங்கி யூஸ் பண்ணுங்கப்பா.