China Timepassonline
Lifestyle

China : மாணவர்களுக்கு காதலிக்க விடுமுறை அளிக்கும் சீன பள்ளிகள் ! | Love Holiday

டைம்பாஸ் அட்மின்

சீனாவில் வசந்த காலத்த கொண்டாடுவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு வாரம் விடுமுறையை 2019 ஆம் ஆண்டில் இருந்து கொடுத்துட்டு இருக்காங்க. இந்த வருஷமும் வசந்த காலத்த கொண்டாடுவதற்கு ஒரு வாரம் லீவ் அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க. இந்த வருஷம் "காதலில் விழுங்கள் மலர்களை ரசியுங்கள்" இதுதான் இந்த வருஷ வசந்த காலத்து விடுமுறைக்கான தீம்மா செட் பண்ணியிருக்காங்க. இந்த ஆண்டு வசந்த கால விடுமுறை தனிநபர் வளர்ச்சி மற்றும் காதல் சார்ந்து இருக்கு‌. மாணவர்கள நாட்குறிப்பு எழுதவும், தனிப்பட்ட தகவல்கள கண்காணிக்கவும் சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லாம மேம்பாடு, பயண வீடியோக்கள வீட்டுப்பாடமா பண்ணி சப்மிட் பண்ணவும் சொல்லியிருக்காங்க !

சீனா கடந்த சில ஆண்டுகளா அதனுடைய மக்கள் தொகைல வீழ்ச்சிய சந்திச்சிட்டிருக்கு. நாட்டுல வயதானவர்களுடைய எண்ணிக்கை அதிகமாவும், பிறப்பு எண்ணிக்கை ரொம்ப சரிஞ்சும் காணப்பட்டது. மக்கள் தொகை எண்ணிக்கையில ஏற்பட்டிருக்க இந்த நெருக்கடிய சமாளிக்க அரசியல் ஆலோசகர்கள் பல பரிந்துரைகளைக் கொடுத்துட்டு இருக்காங்க. இந்த நிலையில சீனாவில் இருக்கக்கூடிய கல்லூரிகளும் மக்கள் தொகை எண்ணிக்கையில ஏற்பட்டிருக்க இந்த நெருக்கடியை சமாளிக்க சில முன்னேற்பாடுகளை எடுத்துருக்காங்க. சீனால செயல்பட்டுட்டு இருக்க ஒன்பது தொழிற் கல்லூரிகள்ல ஏப்ரல் மாதம் ஒரு வார விடுமுறை மாணவர்களுக்கு கொடுத்து லவ் பண்ணுங்கடானு சொல்லி இருக்காங்க !!

Fan Mei கல்விக் குழு, பள்ளிகள் ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓய்வு எடுக்கப் போவதாவும், மாணவர்களை மகிழ்விக்கப் இந்த விடுமுறைனு சொல்லியிருக்காங்க. "இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கைய நேசிக்கவும், வசந்த கால இடைவெளிய அனுபவிப்பதன் மூலம் அன்பை அனுபவிக்கவும்" மாணவர்களுக்கு இந்த 7 நாள் விடுமுறை கொடுத்திருக்காங்க !!!

மாணவர்கள் இயற்கைய ரசிக்கட்டும், இயற்கை சூழ்நிலைல வாழட்டும், மலை காடுனு இயற்கை வளங்கள அனுபவிக்கட்டும், வசந்தகால காற்ற நிம்மதியா சுவாசிக்கட்டும்னு மியான்யாங் தொழிற்கல்லூரியின் துணை டீன் லியாங் குவோஹுய் தன்னோட அறிக்கையில் சொல்லியிருக்காரு.

வேகமாக குறைந்து வர பிறப்பு மற்றும் திருமண விகிதங்கள அதிகரிக்க, சீனால உள்ள பல உள்ளூர் நிறுவனங்கள், மாகாணங்கள் மற்றும் டவுன்ஷிப்கள் மக்கள திருமணத்துல உட்படுத்துவதற்கான வழிகள பரிசோதித்து வருகின்றன. சில நிறுவனங்கள் 30 நாட்கள் "திருமண விடுப்பு" வழங்கியிருக்கு.

ரொம்ப வருஷமாவே மக்கள் தொகையில முதல் இடத்தில இருந்துட்டு இருந்த சீனா, 2022ல் இருந்து மக்கள் தொகை எண்ணிக்கையில பின் வாங்கிட்டு இருக்கு. 2022 ஆம் ஆண்டு இறுதியில 2021 விட நாட்டில் 8,50,000 மக்கள் எண்ணிக்கை குறைந்ததா அந்த நாட்டோட தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாம 16-59 வயது வரை இருக்கக்கூடிய மக்கள் 875.56 மில்லியன், அதாவது 62% மற்றும் 65 வயதுக்கு மேல் இருக்கக்கூடிய மக்களுடைய எண்ணிக்கை 209.78 மில்லியன், அதாவது 14.9 % இருக்கிறதாகவும் அந்த கணக்கெடுப்பு சொல்லியிருக்கு .

நாட்டுடைய மக்கள் தொகையில முதல்ல இருந்த சீனா பின்தங்கிட்டு வர்றத தாங்கிக்க முடியாம இந்த மாதிரியான ஏற்பாடுகளை கொடுத்துட்டு இருக்காங்க. லவ் பண்றதுக்கு லீவானு ஆச்சரியப்படுற மாதிரி தான் இந்த செய்தி நெட்ல வைரல் ஆயிட்டு இருக்கு !!


- நெ.ராதிகா.