காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் பிப்ரவரி 9 ஆம் தேதி சாக்லேட் டே.
காதலர்களை மனதில் வைத்துத்தான் காதலர் தினத்துக்கென்று புதிது புதிதாக சாக்லேட்டுகள் ஆண்டுதோறும் செய்யப்படுகின்றன. இப்படி காதலர்களை நம்பி செய்யப்படும் சாக்லேட்டின் வரலாறையும் சாக்லேட்டின் அர்த்தத்தையும் தெரிந்துக் கொள்வது சுவாரஸ்யமான ஒன்று தானே.
* அமெரிக்காவின் ஒரு பகுதியான `மெஸ்ஸோ அமெரிக்கா'வில்தான் முதன்முதலில் கசப்பான சுவையில், நறுமணப் பொருள்கள், மக்காச்சோள சாறு சேர்த்து காரமான பானமாகப் பருகப்பட்டது இந்த சாக்லேட். (ஆரம்பத்தில் சாக்லேட் என்ற பெயர் இல்லை).
* மத்திய மெக்ஸிகோவில் வாழ்ந்த மக்களின் அசுடெக் மொழியில் உள்ள `ஸோகொட்டல்' (Xocoatl) என்ற வார்த்தையிலிருந்துதான் `சாக்லேட்' என்ற வார்த்தை உருவானது. `ஸோகொட்டல்' என்ற வார்த்தைக்கு `கசப்பான பானம்' என்று பொருள்.
* பல ஆண்டுகளுக்கு முன்பு லத்தீன் அமெரிக்க நாடுகளில் சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கொக்கோ விதைகள் பானத்துக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டன.
* 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் சாக்லேட்டுடன் இனிப்பைச் சேர்த்து பானமாகப் பருகத் தொடங்கினர்.
* நாம் இன்று சாப்பிடும் மார்டன் சாக்லேட் வகையை 1847-ம் ஆண்டு ஜோசப் ஃப்ரை என்ற டச்சுக்காரர்தான் உருவாக்கினார்.
* சாக்லேட் பார்களை முதன்முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த கேட்பரி நிறுவனம் தயாரித்தது.
* வெள்ளை நிற `மில்க் சாக்லேட்' கொக்கோ வெண்ணெயிலிருந்து முதன் முதலில் நெஸ்லே நிறுவனம்தான் தயாரித்தது.
1. மில்க் சாக்லேட் - உங்களுக்கு பால் சாக்லேட் கொடுத்தால் அவர்/அவள் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்று அர்த்தம்.
2. டெய்ரி மில்க் - டெய்ரி மில்க் சாக்லேட் கொடுத்தால் எதற்கும் கவலை வேண்டாம் என்று அர்த்தம்.
3. மதுபான சாக்லேட் - உங்கள் காதலரை இன்னும் அதிகமாக காதலிக்க வைக்கும்.
4. டார்க் சாக்லேட் - காதலர்களுக்குள் இருக்கும் அன்பின் அர்த்தமாக இருக்கும்.
5. கேலக்ஸி சாக்லேட் - அதிகப்படியான காதலை உணர்த்தும்.
6. கேட்பரி 5 ஸ்டார் - காதலின் நம்பகத்தன்மையை உணர்த்துகிறது.
7. ஃபெரெரோ ரோச்சர் சாக்லேட் - இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது.