Lifestyle

பழமொழி நஹி.. புதுமொழி போலோ..

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே ஏன் வளையணும்?, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அதிகாலையில் சரக்கு அடிப்பான்.

Aravindraj R

எல்லாத்தையும் ரீமேக், ரீமிக்ஸ் வந்துடுச்சு. இன்னும் எத்தனை நாள் பழைய பழமொழிகளை சொல்லி போரடிக்கிறது. அதான் பழமொழிகள் அப்படியே உல்டா பண்ணி புதிய மொழியை உருவாக்கியிருக்கிறோம். இதையெல்லாம் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

  • அடி மேல் அடி வைத்தால் மிதி கிடைக்கும்.

  • கூழானாலும் சூடு பண்ணி குடி.

  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் வடு.

  • ஆள் இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரையும் என்னாத்துக்கு?

  • அகத்தின் அழகு நகத்திலும் தெரியும்.

  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே ஏன் வளையணும்?

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அதிகாலையில் சரக்கு அடிப்பான்.
  • ஆசை, வெட்கம், மானம் சூடு சொரணை அறியாது.

  • வாயு உள்ள பிள்ளைக்கு உப்புசம்.

  • ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தெருவில் அலையும்.

  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு அரை காலம் போதும்.

  • மின்னுவதெல்லாம் ஸ்டார் அல்ல.

  • இக்கரைக்கு அக்கரை நல்லது.

  • உப்பைத் தின்றவன் துப்பிவிடுவான்.

  • தை பிறந்தால் லீவு கிடைக்கும்.

  • நண்டு கொழுத்தால் நல்லா தின்னலாம்.

  • வரவு எட்டணா எப்பவும் செல்லாது.

  • கண் கெட்ட பின் சங்கர நேத்ராலயா.

  • தல இருக்க தளபதி ஆடலாமா?

  • பல நாள் திருடன் ஒரு நாள் தாதா ஆவான்.

  • புலி பதுங்குவது பயத்தினாலும் இருக்கலாம்.

  • மடியில் கனம் இருந்தால் வயிற்று உபாதைகள் வரும்.

  • வெண்ணையை வைத்துக்கொண்டு தயிரை விற்று விடு.

  • விரலுக்குத் தகுந்த மோதிரம்.

    - ஆர்.சரண்.