Don Bradman timepass
Lifestyle

கிரிக்கெட்டின் தாதா Don Bradman - Thug life Cricketers | Epi 10

29 சதங்கள், அதுல 12 இரட்டை சதம் அதுலயும் ரெண்டுல 300-க்கும் அதிகமான ரன்கள்னு அடிச்சு நொறுக்கியிருந்தாரு. ஏண்டா பௌலர் ஆனோம்னு வெறுக்கற அளவு பண்ணிடுவாரு.

Ayyappan

டெஸ்டோட இலக்கணத்தையே மாத்தி அத டி20 மாதிரி ஆடறதுல விவியன் ரிச்சர்ட்ஸ், பண்டுக்கெல்லாம் தொழில் கத்துத் தந்த வாத்தியாரு இவரு. வெறும் கோல்ஃப் பால் மற்றும் ஸ்டம்ப் மூலமா சிறந்த கிரிக்கெட்டரா தன்னை செதுக்கிக்கிட்டு கிரிக்கெட் உலகின் சக்ரவர்த்தியா வலம் வந்தவரு. டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேனா இருந்தவர அவரோட தக் லைஃப் தருணங்கள்தான் நிழலுலக டான் ஆக இல்லை நிஜ உலக டான் ஆக, 'டான் பிராட்மேன்' ஆக முடிசூட்டுச்சு.

99.94 - இது ஏதோ பண்பலையோட அதிர்வெண்ணோ, நல்லாப் படிக்குற மாணவனோட சயின்ஸ் மார்க்கோ இல்ல. டெஸ்ட்ல இது ஸ்ட்ரைக்ரேட்டா இருந்தாலே அவங்க எக்ஸ்ப்ளோசிவ் பேட்ஸ்மேனாக எல்லோரையும் அஞ்சி நடுங்க வச்சிடுவாங்க. அப்படியிருக்க இதே 99.94-ன்ற நம்பர தன்னோட டெஸ்ட் ஆவரேஜா வச்சுருக்கதாலதான் அறிமுகமான போட்டி நடந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் உருண்டோடிட்டாலும் இன்னமும் அவரு தலைசிறந்த கிரிக்கெட்டரா கொண்டாடப்படுறார்.

இந்த ஈடற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த தன்னை எப்படி பிராட்மேன் தயார்ப்படுத்திக்கிட்டார் அப்படின்றதுதான் அவர் எவ்ளோ ஸ்பெஷல்னு புரிய வைக்கும். காஸ்ட்லியான பயிற்சியாளர்களோ உபகரணங்களோ இல்ல, வெறும் கோல்ஃப் பால், ஒரே ஒரு ஸ்டெம்ப் குச்சி, ஒரு வாட்டர் டேங்க் - இவ்ளோதான் அவரோட தேவையா இருந்துச்சு. அந்தப் பந்த வாட்டர் டேங்க்கை நோக்கி அடிச்சு அது பவுன்ஸ் ஆகி வேகமா திரும்பி வர்றப்போ ஸ்டெம்ப பேட்டாக மாத்தி அத அடிச்சுப் பழகுனாரு.

வேகமா வர்ற பந்தை டீல் பண்ற வித்தைய இதுதான் பிராட்மேனுக்குக் கத்துத் தந்துச்சு. அதுவும் சைஸ் கம்மியா இருக்க ஸ்டெம்பால அடிச்சு பழகினதால் அது உண்மையான பேட்ட வச்சு ஆடுறப்போ சுலபமாக இருந்துச்சு. இந்த குறுகின இடத்துல பண்ண பயிற்சிதான் அவர பரந்து விரிஞ்ச மைதானம் மொத்தத்தையும் ஆக்கிரமிக்க வச்சது. அதுவும் அவர் அடிச்ச சதங்கள் எல்லாம் ரொம்ப கேசுவலா வந்துச்சு எந்தப் பிரயத்தனமும் இல்லாம.

செட்டில் ஆகிட்டார்னா ஆட்டமிழக்க வைக்கறது ரொம்பவே கடினம். சதத்தை இன்னமும் பெரிய ஸ்கோரா மாத்துறதுல அவரு கில்லாடி. 29 சதங்கள், அதுல 12 இரட்டை சதம் அதுலயும் ரெண்டுல 300-க்கும் அதிகமான ரன்கள்னு அடிச்சு நொறுக்கியிருந்தாரு. ஏண்டா பௌலர் ஆனோம்னு வெறுக்கற அளவு பண்ணிடுவாரு. இன்னைக்கு மாதிரி இல்லாம பெரிய பவுண்டரிகளையே பந்து உள்ளூர் விருந்தாளி மாதிரி அடிக்கடி விசிட் பண்ணும்.

இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 5000 ரன்களைக் குவிச்சு அழ வச்சுருக்காரு. இணையே இல்லாத ஒருத்தர்னு நிருபிச்சுருக்காரு. இவ்வளவுக்கும் அவர் ஆடுன 1928-48ல சில வருஷங்கள் உலகப்போர்னால பல போட்டிகளை நடக்க விடாம பண்ணிடுச்சு. இல்லாட்டி அவரோட சாதனைகள் இன்னமும் விரிவடைஞ்சு இருக்கும்.

கடைசிப் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேற வெறும் நான்கு ரன்கள் குறைவாக அடிச்சதால 100-ன்ற மேஜிக் நம்பரை அவரோட பேட்டால எட்ட முடியாம போச்சு. இருந்தாலும் டான் டான்தானே?!

"செய்யக் கடினமான விஷயத்த நான் இப்பவே பண்ணுவேன், செய்ய சாத்தியமே இல்லாத சவால்னு சொல்றீயா அது நான் ஏற்கனவே செஞ்சு முடிச்சுருப்பேன்" - இந்த வார்த்தைகள்ல ததும்புற தன்னம்பிக்கை தான் டான் பிராட்மேன்!

தக் லைஃப்புக்கு பல பரிமாணங்கள் இருந்தாலும் அபரிதமான தன்னம்பிக்கைன்றதுதானே அதோட முக்கிய மூலப் பொருள்......