Green baggy
Green baggy timepass
Lifestyle

David Warner : Baggy Green cap மீது Australia Cricketerகளுக்கு இவ்வளவு பாசம் ? | Aus vs Pak

Ayyappan

பெரிய அளவிலான செண்டிமெண்ட்கள் எதுவுமே இல்லாத ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டர்கள் ஏன் Baggy Green தொப்பி மேல மட்டும் இவ்ளோ பிரியத்தை அள்ளிக் கொட்டுறாங்க?

கஷ்டப்பட்டு வாங்குன உலகக்கோப்பைக்கு மேலேயே காலைத் தூக்கி வச்சு போஸ் கொடுத்திருந்தாரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ். போராடி ஜெயிச்சே ஆகணும்ன்ற வெறி அதிகம்னாலும் அவ்ளோதான் அவங்க அதற்குக் கொடுக்குற மரியாதை! அப்படியிருக்க பசங்க பைக் மேல வைக்குற லவ் மாதிரி ஏன் Baggy Green தொப்பிகள் மேலே மட்டும் ஆஸ்திரேலியர்களுக்கு இவ்ளோ ஈர்ப்பு?

ஒருபக்கம், ஃபேர்வெல் மேட்ச்ல நான் அதைப் போட்டுட்டு ஆடணும், எடுத்தவங்க திருப்பித் தாங்கன்னு வார்னர் கெஞ்சுறார், இன்னொரு பக்கம் அதிக சேதாரத்தோட இருக்க அந்த தொப்பிய போட்ருக்க ஸ்டீவ் ஸ்மித்தை அவங்க நாட்டு ரசிகர்களே திட்டித் தீர்க்கறாங்க, "அட எலி கடிச்சுருச்சுப்பா"னு சொன்னா இன்னமும் அதிகமாக திட்டு விழுது. அப்படி என்னதான்யா இருக்கு அந்த தொப்பில?

உண்மைல 1899 காலகட்டத்துக்கு முன்னாடி இது பச்சைக் கலர்லயும் இல்ல, Baggy ஆகவும் இல்ல. அதற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமா இந்த வடிவத்துக்கு வந்தது. அப்போகூட ஒரே தொப்பியை டெபுட் முதல் ரிட்டயர்ட் ஆகுறவரை எல்லாம் பயன்படுத்துற வழக்கமும் இல்ல. ஒரு போட்டிக்கு பல தொப்பிகளைக் கூட பயன்படுத்திட்டு இருந்தாங்க.

ஒருமுறை இயான் செப்பல்கூட இதைப் பற்றி கிண்டலடிச்சிருந்தாரு. "1970கள் வரை நாங்க இதைப் பற்றி பேசிக்கிட்டது கூட இல்லை. இன்னமும் சொல்லப் போனால் இப்போ ஏதோ பாரம்பரிய அடையாளம் மாதிரி இதற்கு மரியாதை கொடுக்கறது எனக்கு சிரிப்பைத் தான் வர வைக்குது. வெறும் ஐந்து டாலர் மதிப்புள்ள துணி அது அவ்வளவு தான். இன்னமும் சொல்லப் போனா பில் லௌரி அதனைப் பயன்படுத்தி அவரோட அறையைக் கூட சுத்தம் பண்ணுவார். நானே பார்த்துருக்கேன்"னு கிண்டல் அடிச்சிருந்தாரு. ஆக இது இடையில் ஒட்டிக் கொண்ட வழக்கமே ஒழிய பல வருஷத்திற்கு முற்பட்டது இல்ல.

2003-ல பிராட்மேனோட Baggy Green தொப்பி 4,25,000 டாலருக்கு ஏலத்தில் விலைக்குப் போச்சு. இது பழங்காலத்து பொருட்களை சேகரிக்கறவங்களுக்கு இடையே இந்த தொப்பிகளுக்கான ஒரு வரவேற்பை உண்டு பண்ண ஆரம்பிச்சது. பல வீரர்களோட தொப்பிகளும் பிராட்மேனோட தொப்பியின் விலை அளவுக்குப் போகாட்டியும் நல்ல விலையை எட்டுச்சு.

அந்தக் காலகட்டத்திலே பயன்படுத்தப்பட்ட தொப்பிகளோட வடிவம் பிராட்மேன் காலத்தோடது மாதிரி இல்ல. கொஞ்சம் மாறிடுச்சு. அதன் பிறகு தான் அதைப் பழையது போல் வடிவமைக்கணும்ன்ற ஆர்வமும் வர ஆரம்பிச்சது. அதை முன்னின்று பண்ணவங்க ஸ்டீவ் வாக், மார்க் டெய்லர் தான். குறிப்பாக ஸ்டீவ் வாக் தான் அதனை பழையபடி பிராட்மேன் அணிந்து இருந்தது போல் மாத்த வச்சாரு.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டோட கலாச்சார அடையாளம்ன்ற பார்வைல கொஞ்சம் கொஞ்சமாக இது எடுத்துக் கொண்டு போக ஆரம்பிச்சது இந்தப் புள்ளியில இருந்துதான். டிரேடோட (Trade) டிரெடீசனும் ஒண்ணா சேர்ந்ததால வந்த செண்டிமெண்ட் தான் இது. அந்த வசீகரம் தான் பாண்டிங், கிளார்க், ஸ்மித்னு இப்போ இருக்க வீரர்கள் வரை கடத்தப்பட்டு நீண்டிருக்கு.

ஆஸ்திரேலியால இன்னைக்கு டொமெஸ்டிக் லெவல்ல ஆடுறவங்க மட்டுமல்ல கல்லி கிரிக்கெட் லெவல்ல ஆடுறவங்க வரைக்கும் என்னைக்காச்சும் அதனை அணிந்து நாட்டுக்காக ஆடிற மாட்டோமான்ற தாகத்தோடயும் தவிப்போடுமே ஆடுறாங்க.

மொத்தத்தில் ஒரு ராணுவ வீரன் தன்னோட மிலிட்டரி யூனிஃபார்மை அணியறப்போ கிடைக்குற அதே பெருமிதத்தை இந்த Baggy Green ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் தருதுன்னு சொன்னா அது பொய்யில்லை.