Pizza
Pizza Pizza
Lifestyle

UP : Pizzaவுக்கு பதிலாக காதலை டெலிவரி செய்த Delivery boy !

சு.கலையரசி

கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த Delivery Boy ஒருவரிடம் பெண் ஒருவர் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். உணவு டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸப்பிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞரின் மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் பதிவிட்டுள்ளார். படம் இணையத்தில் வைரலாகி பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து டெலிவரி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “எந்தவொரு தவறான நடத்தைக்கும் நிறுவனம் பொறுப்பல்ல. இச்சம்பவம் தெரியவந்ததும் நாங்கள் உடனடியாக அந்த நபரின் வேலையை நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்துவிட்டோம். இது குறித்த விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெலிவரி நிறுவனத்தின் அதிகாரியிடம்,  அந்த பெண் “இது நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் தனியுரிமை மீறல் என்று நீங்கள் நினைக்கவில்லையா? நீங்கள் அவரை பணிநீக்கம் செய்தாலும், அவருக்கு என் முகவரி தெரியும். என்னையோ என் குடும்பத்தையோ அந்த டெலிவரி பாய் தாக்க முயன்றால் என்ன நடக்கும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"மெசேஜில் தனது பெயரை கபீர் என்று குறிப்பிட்டுள்ளார். பணியிடத்தில் அவரது பெயர் "மன்னு" என்று இருக்கிறது. ஆனால் அவரது மின்னஞ்சல் ஐடி பப்லு கபீர் என்று இருக்கிறது. நீங்கள் அவரது அடையாள அட்டையை சரிபார்த்தீர்களா? ஒருவருக்கு எப்படி 3 பெயர்கள் இருக்க முடியும்? விஷயம் மிக மோசமானது. இது உங்கள் நிறுவனத்தின் தரவு மீறல், நம்பிக்கை மீறல் மற்றும் தனியுரிமை மீறல். இந்த விவகாரம் தொடர்பாக எனக்கோ என் குடும்பத்திற்கோ எதாவது ஏற்பட்டால் உங்கள் நிறுவனமே முழு பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெலிவரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அப்பெண்ணிடம், “இது மிகவும் மோசமான சம்பவம், ஏற்றுக்கொள்ள முடியாதது. மீண்டும் ஒருமுறை நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் டெலிவரி செய்தவருக்கு எதிராக மனிதவள மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் சம்பந்தப்பட்ட அந்த டெலிவரி இளைஞரிடம் உள்ளூர் ஊடகமொன்று கேட்டபோது அவர், “என்னை பணி நீக்கம் செய்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.