Lifestyle

மதுரக்காரய்ங்கெ ஸ்லாங் கத்துக்கலாம் வாங்கப்பு

"ஏழரையக் கூட்டாத - பிரச்னை பண்ணாதே. பட்டறையப் போடு - உட்கார்ந்து வெட்டிக் கதை பேசுதல்."

Aravindraj R

தமிழ்நாட்டுல முன்னூத்தி முப்பத்தி மூனு ஸ்லாங் இருந்தாலும், மதுர ஸ்லாங்குக்குனு தனி ஆடியன்ஸே இருக்கு. அப்டிப்பட்ட ஸ்லாங்க எல்லா தமிழர்களுக்கு கத்துக்கிட்டாதான, சங்கம் வச்சு தமிழ் வளர்த்த மதுரக்காரய்ங்கெளுக்கு பெரும.. என்னப்பு சொல்றீங்க?

  • மதுரை - மதுர.

  • அங்கிட்டு - அந்த பக்கம்.

  • இங்கிட்டு - இந்த பக்கம்.

  • லந்து - கலாய்த்தல்.

  • வெஞ்சனம் - தொடு காய்.

  • இம்புட்டுக்காண்டி - சிறிய அளவு

  • அடுத்த ட்ரீப்பு - அடுத்த முறை.

  • டாவு - காதலிக்கும் பெண்.

  • எம்பூட்டு - எவ்வளவு.

பட்டறையப் போடு - உட்கார்ந்து வெட்டிக் கதை பேசுதல்
  • ராவுராண்டா - அறுக்கிறான்.

  • எழரையக் கூட்டாத - பிரச்னை பண்ணாதே.

  • வக்கனையாப் பேசு - வாய் கிழிய பேசு.

  • டாப்பு - வெட்டிக் கதை பேசும் இடம்.

அலப்பறை - பந்தா

ஆட்டையப் போடு - திருடு.
பைய தா - மெதுவா தா.
சூதானம் - பத்திரம்.
ஊடால - இடையில்.
ரூட்டக் குடுக்காத - பொய் சொல்லாத.
வெள்ளன - விடியற்காலை / சீக்கிரம்.
வையிறாய்ங்கெ - திட்டுறாங்க.