hen timepass
Lifestyle

முதலில் வந்தது கோழியா ? முட்டையா ? - விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் !

சு.கலையரசி

இந்த உலகில் எல்லோருக்கும் பதில் தெரியாமல் இருக்கும் பல கேள்விகளில் ஒன்றுதான் முதலில் வந்தது கோழியா? முட்டையா? என்ற கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் யாருக்குமே தெரியாமல் இருந்த நிலையில் இப்போது இந்த கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனின் ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை முதன்மையாகக் கொண்டு தொடங்கிய ஆழமான ஆராய்ச்சிக்குப் பின் உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கோழி முதலில் வந்தது என்று விஞ்ஞானிகள் கூறிய பிறகு அப்பொழுது முட்டை எங்கிருந்து வந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். ஆனால், இதற்கும் விஞ்ஞானிகள் பதில் அளித்துள்ளனர்.

கோழி முட்டையின் ஓட்டில் ஓவோக்லிடின் என்ற புரதம் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. அதுமட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது என்பதால், கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த ஓவோக்லிடின் புரதம் கோழியின் கருப்பையில் உருவாகும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது.

விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்துள்ளது. என்னதான் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்திருந்தாலும் இந்த உலகில் கோழி எப்படி முதலில் வந்திருக்கும், அந்த கோழி உருவாக காரணமாக இருந்தது எது? என்ற பல கேள்விகள் இப்போது மக்களை சூழ்ந்துள்ளது. அந்த வகையில் இந்தக் கேள்வி இன்னும் தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது.