Suriname டைம்பாஸ்
Lifestyle

Suriname : குடியரசுத் தலைவருக்கு விருது வழங்கிய சுரினாம் நாட்டை பற்றி தெரியுமா?

சு.கலையரசி

இதற்குமுன் அதிகம் கேள்விப்படாத சுரினாம் நாட்டில் இந்திய குடியரசுத் தலைவருக்கு உயரிய விருது. இந்த நாட்டைப் பற்றித் தெரியுமா?

"சுரினாமின் உயரிய விருதான "Grand Order of the Chain of the Yellow Star" விருதைப் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெற்றார்.

இந்த சுரினாம் நாடு தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும்.  இதன் மக்கள்தொகை 2023 மதிப்பீட்டின்படி 628,800 (6.2 மில்லியன்) ஆக உள்ளது. இந்த நாட்டின் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடல் , கிழக்கில் பிரெஞ்சு கயானா, தெற்கே பிரேசில் மற்றும் மேற்கில் கயானா ஆகியவற்றால் எல்லையாக உள்ளது.

இதன் பொருளாதாரம் இயற்கை வளங்களைச் சார்ந்துள்ளது. குறிப்பாக பாக்சைட். உலகின் பாக்சைட்  உற்பத்தியில் சிறந்த நாடாக உள்ளது. இந்த சுரினாம் நாட்டின் தெற்கே நான்கில் ஒரு பகுதி முழுக்க முழுக்க அழகிய வெப்பமண்டல மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக சந்திரிகா பிரசாத் சந்தோகி உள்ளார்.

ஜூன் 5 ஆம் தேதி திரௌபதி முர்முவுக்கு "சுரினாமின் உயரிய விருதான "Grand Order of the Chain of the Yellow Star" என்ற விருது சுரினாம் குடியரசுத் தலைவர் சந்திரிகா பிரசாத் சந்தோகியால் வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட திரௌபதி முர்மு, "இந்த விருது தனக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்குமானது. சுரினாமின் உயரிய விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய இந்திய - சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இந்த கௌரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் அவர், "சுரினாமில் ஒரு மினி இந்தியா வசிப்பதாகவும், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் உட்பட சுரினாமின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களில் இந்தியர்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார். சுரினாமில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்” என்றும் கூறினார்.