cricket
cricket timepass
Lifestyle

World Cup 2023 : Eng vs WI மேட்ச் - அதென்ன Kings of Lords ? - உலககோப்பை ரீவைண்ட்|Epi 3

Ayyappan

Lord of Rings தெரியும் Kings of Lords தெரியுமா? 1979 கிரிக்கெட் உலகக்கோப்பை ஃபைனல் நடக்குற காலகட்டத்துக்கு, இடத்துக்கு டைம் டிராவல் போய் அது என்னன்னு தெரிஞ்சுப்போமா?

1979 ஃபைனலுக்கு கோல்டன் டிக்கெட் வாங்கி முன்னேறுன வெஸ்ட் இண்டீஸ் டிஃபெண்டிங் சாம்பியன் வேற. சும்மாவே காட்டு காட்டுனு காட்டுறவங்க கைல இருக்க கோப்பைய விட்டுடுவாங்களா? எதிரணியா இருக்க இங்கிலாந்த தூக்கிப் போட்டு பந்தாடப் போறாங்கன்னு சொல்லப்பட்டுச்சு. லார்ட்ஸ் ஒரு போர்க்களத்துக்கு தயாராச்சு.

முதல்ல பேட்டிங் பண்ண வெஸ்ட் இண்டீஸுக்கு செம ஷாக். டாப் 5ல க்ளைவ் லாய்ட் உட்பட நாலு பேரு அணியோட ஸ்கோர் 99 ஆக இருக்கப்பவே கிளம்பிட்டாங்க. புதுசா வந்த காலீன்ஸ் போத்தம் வீசுன ரெண்டு பந்துகள்ல பவுண்டரி அடிச்சுதான் ஆரம்பிச்சாரு.

ஒரு அதிரடி கேமியோ காத்திருக்குன்றதுக்கான டீஸர் அது. இருந்தாலும் கைல விக்கெட் கம்மியா இருக்கதால கொஞ்ச நேரம் ரெண்டு பேருமே டிஃபெண்டிங் மோடுக்கு போய்ட்டாங்க. 60 ஓவர்கள் கொண்ட போட்டியில 34 ஓவர்கள்ல கூட 125 ரன்கள் தான் வந்திருந்தது. அதுக்கு அப்புறம் தான் இருவரோட அதிரடியும் தொடங்குச்சு.

காலீன்ஸ் கிங் பத்த வச்ச பட்டாசா வெடிச்சு பந்துகள நாலாபுறமும் சிதறடிச்சு பௌலர்கள கலங்கடிச்சாரு. மறுபுறம் விவியன் ரிச்சர்ட்ஸ் அவரு பங்கும் நின்னு நிதானமா வேட்டையாடிட்டி இருந்தாரு. இந்த இருவருக்கும் இங்கிலாந்து பௌலிங் யூனிட்னால ஈடுகொடுக்க முடியல.

60 ஓவர்கள் கொண்ட போட்டில நான்கு பிரதான பௌலர்களும் மூன்று பார்ட் டைம் பௌலர்களும் போதும்ன்ற ஐடியால இங்கிலாந்து இறங்கியிருந்தது. அந்த இடத்துல தான் தப்பு பண்ணிட்டாங்க.

அந்த பார்ட் டைம் பௌலர்களக் குறி வச்சு ரன்கள இந்தக் கூட்டணி சேர்த்துடுச்சு. க்ளூலஸ் பௌலிங்கா இங்கிலாந்து தரப்பு மாறிடுச்சு. குறிப்பா காலீன்ஸ் கிங் அதிகமாகவே அட்டாக்கிங் பாணில ஆடுனாரு. 66 பந்துகள்ல 86 ரன்கள்னு விட்டு விளாசிட்டாரு. எந்தளவு வேகமா ரன்களக் குவிச்சிருந்தாருன்னா ரிச்சர்ட்ஸ் 90 தாண்டியும் காலீன்ஸ் 50-ஐ எட்டல. ஆனா ரிச்சர்ட்ஸ் செஞ்சுரி போடறதுக்குள்ல சூறையாடி ரன்களக் குவிச்சுட்டு வெளியேறிட்டார்.

ஒருசில விஷங்கள் சையனைடு மாதிரி, ஒரே செகண்ட்ல வேலைய முடிச்சுடும். இன்னும் சில ஸ்லோ பாய்ஷன் மாதிரி நேரமெடுத்தாலும் சுவடே தெரியாம செய்ய வேண்டியத செஞ்சுடும். காலீன்ஸ் கிங் அன்னைக்கு சையனைடா இருந்தார்னா ரியல் கிங் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்லோ பாய்ஷனாக மாறுனாரு. காலீன்ஸ் ஆட்டமிழந்த பிறகு ரிச்சர்ட்ஸோட அதிரடி ஆரம்பிச்சது. டெய்ல் எண்டர்கள் வருவதும் போவதுமா இருந்தாலும் பந்துகள பவுண்டரிக்கு பார்சல் பண்றத ரிச்சர்ட்ஸ் நிறுத்தவே இல்ல.

செஞ்சுரி தாண்டியும் அது தொடர்ந்தது. 138 ரன்கள குவிச்சது மட்டுமில்ல கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தாரு. உலகக்கோப்பை ஃபைனல்ல அடிக்கப்பட்ட தனி ஒருவரோட அதிகபட்ச ஸ்கோரா அது ரொம்ப நாளைக்கு நீடிச்சது. இது 287 ரன்கள டார்கெட்டா வைக்க உதவுச்சு. வலிமையான வெஸ்ட் இண்டீஸ் பௌலிங்க எதிர்த்து இங்கிலாந்து எங்க இருந்து இவ்வளவு ரன்னை அடிக்கிறது?

ஆக ரியல் கிங் விவியன் ரிச்சர்ட்ஸும் காலீன்ஸ் கிங்கும் சேர்ந்து அன்றைய தினம் கிங்ஸ் ஆஃப் லார்ட்ஸாக அவதாரம் எடுக்க தன்னோட இரண்டாவது உலகக்கோப்பைய கையில் ஏந்துச்சு.